மா.சுப்பிரமணியத்தின் மகன் உயிரிழந்தார் எனும் செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன்.. அமைச்சர் SP.வேலுமணி உருக்கம்

Published : Oct 17, 2020, 01:52 PM IST
மா.சுப்பிரமணியத்தின் மகன் உயிரிழந்தார் எனும் செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன்.. அமைச்சர் SP.வேலுமணி உருக்கம்

சுருக்கம்

சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியம் அவர்களது இளைய மகன் அன்பழகன் உயிரிழந்த சம்பவத்திற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியம் அவர்களது இளைய மகன் அன்பழகன் உயிரிழந்த சம்பவத்திற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுகவின் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியத்துக்கும், அவரது மனைவி மற்றும் மகன் அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.

இந்நிலையில் மா.சுப்பிரமணியத்தின் இளைய மகன் அன்பழகன் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பிய நிலையில் உடல்நலக்குறைவால் இன்று திடீரென உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியம் அவர்களது இளைய மகன் அன்பழகன், #COVID19 பாதிப்பு காரணமாக இன்று உயிரிழந்தார் எனும் செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். மா.சுப்பிரமணியம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!