அரசு நிலம் அபகரிப்பு வழக்கு... திமுக எம்.எல்.ஏ., மா.சு.,வுக்கு நிபந்தனை முன்ஜாமீன்..!

By vinoth kumarFirst Published Jun 25, 2019, 3:17 PM IST
Highlights

அரசு நிலத்தை அபகரித்தது தொடர்பான வழக்கில் சைதாப்பேட்டை தொகுதியைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் அவரது மனைவி காஞ்சனாவுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 

அரசு நிலத்தை அபகரித்தது தொடர்பான வழக்கில் சைதாப்பேட்டை தொகுதியைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் அவரது மனைவி காஞ்சனாவுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த எஸ்.பார்த்திபன். இவர், கிண்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் சென்னை மேயருமான மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் சிட்கோ நிறுவனம், எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு கடந்த 1959-ம் ஆண்டு குத்தகை அடிப்படையில் ஒதுக்கிய அரசு நிலத்தை சுப்பிரமணியன் மேயராக இருந்த 2006-2011 காலக்கட்டத்தில் கூட்டு சேர்ந்து அபகரித்து மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றியுள்ளார். எனவே இருவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

 

இதன்படி, அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது இருவரையும் கைது செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது அரசு நிலத்தை அபகரித்தது தொடர்பான வழக்கில் எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் அவரது மனைவி காஞ்சனாவுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும் தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்கக் கூடாது என கண்டிப்புடன் நீதிமன்றம் கூறியுள்ளது.

click me!