நேரம் பார்த்து ஸ்கெட்ச் போட்டு பழிவாங்கும் அதிமுக... திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி வீட்டில் அதிரடி சோதனை...!

By vinoth kumarFirst Published Jan 31, 2020, 11:09 AM IST
Highlights

அதிமுக ஆட்சியின் போது 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. இவர், போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக 16 பேரிடம் 95 லட்சம் பெற்று மோசடி செய்ததாக அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தார். அவரது சகோதரர் அசோக்குமார் மீதும் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக சென்னை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

அதிமுகவில் அமைச்சராக இருந்த போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக கூறப்படும் புகாரில் முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ.வுமான செந்தில்பாலாஜி வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. 

அதிமுக ஆட்சியின் போது 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. இவர், போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக 16 பேரிடம் 95 லட்சம் பெற்று மோசடி செய்ததாக அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தார். அவரது சகோதரர் அசோக்குமார் மீதும் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக சென்னை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில், கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில்பாலாஜி வீடு மற்றும் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அலுவலகம், சென்னையில் உள்ள வீடு, தம்பி அசோகன் வீடுகளிலும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு இடங்களில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வீடு முன் குவிந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

click me!