தன் கட்சிக்காரர்களையே நடுங்க வைக்கும் திமுக எம்.எல்.ஏ... அட்ராசக்க... அட்ராசக்க..!

Published : Sep 26, 2020, 04:42 PM IST
தன் கட்சிக்காரர்களையே நடுங்க வைக்கும் திமுக எம்.எல்.ஏ... அட்ராசக்க... அட்ராசக்க..!

சுருக்கம்

இதனால் அடுத்து வருக் சட்டமன்றத் தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட, சரவணன் காய் நகர்த்தி வருகிறார்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர்.சரவணன்.  நரிமேட்டில் கிளினிக் நடத்தி வருகிறார். ஆனால், அதற்கு முன் மதிமுக, பாஜக என பல கட்சிகளில் இருந்து தி.மு.க.,வில் சேர்ந்து, எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால் கட்சியில் பழம் தின்று கொட்டை போட்ட நிர்வாகிகள், இவரை ஓரங்கட்ட நினைக்கிறார்கள். 

 ஆனால் இதற்கெல்லாம் அசராத சரவணன், தனக்கு ஒரு ஆதரவாளர்கள் வட்டத்தை உருவாக்கி, கட்சி நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார். இவரது தொகுதிக்குட்பட்ட தெற்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய சேர்மன்கள், கவுன்சிலர்கள் யாரும், இவரை கண்டு கொள்வதே இல்லை.

 

இதனால் அடுத்து வருக் சட்டமன்றத் தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட, சரவணன் காய் நகர்த்தி வருகிறார். இதற்காவே பல போராட்டங்களை அந்த தொகுதியில் நடத்தி வருகிறார். கொரோனா நிவாரண உதவிகளையும் வழங்கிக் கொண்டு வருகிறார். இவரால், இந்த தொகுதியில் போட்டியிட விரும்பும், தி.மு.க., நிர்வாகிகள் பயத்தில் இருக்கிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!