
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, நெல் பயிரிடும் விவசாயிகளுக்காக மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் துணை கேள்வி எழுப்பினார்.
கடந்த வருடம், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, இ-கொள்முதல் மற்றும் பணப்பட்டுவாடாவில் பல முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து விதி எண் 110ன் கீழ் 100% இ-கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து உணவு துறை அமைச்சர் காமராஜிடம் மதுரை மத்திய தொகுதி திமுக உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
அதாவது ஜெ. அறிவித்த திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு விட்டதா? அல்லது எப்போது நடைமுறைக்கு வரும்? என தெரிவிக்கவேண்டும் என கேட்டு கொண்டார். இல்லையெனில் நடப்பு பருவத்திலேயே சோதனை அடிப்படையில் திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என கேட்டு கொண்டார்.
இதற்கு பதிலளித்த உணவு அமைச்சர் காமராஜ் டெல்டா மாவட்டங்களில் 100% இ-கொள்முதல மையம் சிறப்பாக செயல்படுகிறது என்றும் 332.89 கோடி ரூபாய் 73,367 விவசாயிகளுக்கு ECS அதாவது Electronic Bank Transfers முறையில் பணப்பட்டுவாடா வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பதிலளித்தார்.
இதனை தொடர்ந்து கேள்வி எழுப்பிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆருக்கு விளக்கமாக ஒரு துண்டு சீட்டில் எழுதி அனுப்பினார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் திமுக உறுப்பினர், நெல் பயிரிடும் விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையிலான கோரிக்கைகளை துண்டு சீட்டில் எழுதி அமைச்சரிடம் கொடுத்தார்.அதில் ஜெயலலிதா அறிவித்த நல்ல திட்டங்களை பட்டிலயலிட்டு உடனடியாக அமல்படுத்தவேண்டும் என்றும் இல்லையெனில் ECS முறையிலான பணப்பட்டுவாடா முறையாவது உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.
இதற்கு கனிவோடு பதிலளித்த உணவு அமைச்சர் காமராஜ் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதாக தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிடிஆர் 110 விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை பட்டியலிட்டார்.
1. நெல் கொள்முதல் நிலையங்களில் மின்னணு எடை இயந்திரங்கள் அமைக்கப்படும்.
2. எடை இயந்திரங்கள் லோக்கல் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டு எடை பதிவு செய்யப்படும்.
3. லோக்கல் கம்ப்யூட்டர் அரசு நெட் ஒர்க்குடன் இணைக்கப்பட்டு மைய டேட்டா சென்டரில் தனித்தனியாக பதிவு செய்யப்படும்.
4. முறைகேடுகளை தவிர்க்க நெல்லுக்கான தொகையை சிறப்பு கணினி செயலி மூலம் விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்படும், plus receipt will be printed
5 நெல்லுக்கான விலை, எடை மற்றும் அது யாருடையது என்பதை சென்ட்ரல் டேட்டாவில் பதிவு செய்யப்படும்.
6. நெல்லுக்குரிய பணம் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு சென்ட்ரல் டேட்டாவில் பதிவு செய்யப்பட்டபடி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
மறக்கப்பட்டிருந்த E கொள்முதல் நிலைய அறிவிப்புகளை சட்டசபையில் கிளப்பி நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, களத்தில் குதித்த பிடிஆர் அதோடு நின்று விடாமல், இ கொள்முதல் தொடர்பாக ஆராய்ச்சிகள் அல்லது வேறு உதவிகள் தேவைப்பட்டால் தேனி மாவட்டத்தில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அமைச்சரிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்ததாக கூறினார்.