குறைந்த வாடகையில் அம்மா திருமண மண்டபம்: சட்டமன்றத்தில் உடுமலை ராதாகிருஷ்னன் அறிவிப்பு...

 
Published : Jul 03, 2017, 06:13 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
குறைந்த வாடகையில் அம்மா திருமண மண்டபம்:  சட்டமன்றத்தில் உடுமலை ராதாகிருஷ்னன் அறிவிப்பு...

சுருக்கம்

amma marriage mahaal in low cost said udumalai rathakirushnan

சென்னையில், நான்கு இடங்களில் அம்மா திருமண மண்டபம் அமைக்கப்படும் என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஏழை எளியோர்கள் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்த அம்மா திருமணம் மண்டபம் கட்டப்படும் என்று கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

இந்த நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், சென்னை மற்றும் மதுரையில் அம்மா திருமண மண்டபம் கட்டப்படும் என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

வீட்டு வசதி மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. சென்னையில் எங்கெல்லாம் அம்மா திருமண மண்டபம் அமைக்கப்படும் என்று உறுப்பினர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து பேசிய வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சென்னையில் 4 இடங்களிலும், மதுரையில் அம்மா திருமண மண்டபம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

சென்னையில், கொரட்டூர், வேளச்சேரி, பருத்திப்பட்டு மற்றும் அயம்பாக்கத்தில் அம்மா திருமண மண்டபம் கட்டப்படும் என்று கூறினார். 

மதுரையில் அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் அம்மா திருமண மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!