மார்ச்.21 அன்று திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்... அறிவித்தார் அரசு கொறடா கோவி. செழியன்!!

By Narendran S  |  First Published Mar 13, 2023, 10:17 PM IST

வரும் 21 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அரசு தலைமை கொறடா கோவி செழியன் தெரிவித்துள்ளார். 


வரும் 21 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அரசு தலைமை கொறடா கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வருகிற 21 ஆம் தேதி மாலை 5 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்... டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!!

இதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 22 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதையும் படிங்க: அண்ணாமலை தலைவரான பின் மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதையே இல்லை... முன்னாள் பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு!!

click me!