பிறந்த நாளில் இறந்த ஜெ.அன்பழகன்... சுகாதார துறையிடம் ஒப்படைக்கப்படும் உடல்!

By Asianet TamilFirst Published Jun 10, 2020, 9:01 AM IST
Highlights

கொரோனாவால் உயிரிழக்கும் உடல்களை அதன் உறவினர்களிடம் நேரடையாக வழங்கப்படுவதில்லை. அந்த உடல் மூலம் மற்றவர்களுக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், சுகாதாரத் துறையும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளும் சேர்ந்தே உடல் அடக்கம் அல்லது தகனத்தை மேற்கொள்கின்றன. 

மறைந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல் சுகாதார துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.


 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், சிகிச்சை பலனின்றி இன்று காலை 8.05 மணிக்கு உயிரிழந்தார். ஏற்கனவே கல்லீரல் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டிருந்த அன்பழகன், திமுக அறிவித்த ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் நாள்தோறும் பொதுமக்களை சந்தித்து உதவிகளை வழங்கிவந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, தற்போது உயிரிழந்துள்ளார்.
கொரோனாவால் உயிரிழக்கும் உடல்களை அதன் உறவினர்களிடம் நேரடையாக வழங்கப்படுவதில்லை. அந்த உடல் மூலம் மற்றவர்களுக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், சுகாதாரத் துறையும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளும் சேர்ந்தே உடல் அடக்கம் அல்லது தகனத்தை மேற்கொள்கின்றன. அந்த வகையில் மறைந்த ஜெ.அன்பழகனின் உடல் சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கும் நடைமுறைகள் தொடங்கியுள்ளன. அவருடைய உடலைப் பெற்ற பிறகு சுகாதார துறையும் சென்னை மாநகராட்சியும் இணைந்த இறுதிச் சடங்கு பணியை மேற்கொள்ள உள்ளன. அன்பழகனின் உடல் தி. நகர் அருகே உள்ள கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த ஜெ.அன்பழகனின் 62-வது பிறந்த நாள் ஆகும். பிறந்த நாளிலேயே அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

click me!