திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 8.05 மணியளவில் உயிரிழந்தார்.
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 8.05 மணியளவில் உயிரிழந்தார்.
சென்னை மாநகரில் கொரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஊரடங்கு காலத்தில், பொதுமக்களுக்கு தி.மு.க-வினர் நிவாரண உதவிகளைச் செய்து வந்தனர். இந்நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏ-வான ஜெ.அன்பழகன் நிவாரண உதவிகள் வழங்குவதில் வேகம் காட்டிவந்தார். இதன் தொடர்ச்சியாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது.
undefined
இதனையடுத்து, ஜெ.அன்பழகன் சிகிச்சை பெற்றுவரும் ரேலா மருத்துவமனையில் இருந்து, அவருக்குத் தேவையான மருந்துகளை ஐதராபாத் நகரில் இருந்து கொண்டுவர விரும்பியுள்ளனர். அங்கு தயாரிக்கப்படும் remdesivir 100mg என்ற மருந்து பவுடரை உடலில் செலுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, தெலங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் உதவியுடன் சென்னைக்கு கொண்டு வரப்படட்டு அவருக்கு செலுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை முதல் ஜெ. அன்பழகனின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 95 சதவீதம் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அவரது மிகவும் ஆபத்தான நிலையில் இருந்து வந்தார்.
இதனிடையே ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து சென்னை தனியார் மருத்துவமனையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்து வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி தற்போது ஜெ.அன்பழகன் உயிரிழந்துள்ளார்.