தேரை இழுத்து தெருவில் விட்டுட்டாங்க..! கதறும் நியூஸ் ரீடர் வரதராஜன்..! காரணம் திமுக ஐடி விங்காம்..!

By Selva KathirFirst Published Jun 10, 2020, 8:05 AM IST
Highlights

சென்னையில் எந்த மருத்துவமனையிலும் படுக்கை வசதிகள் இல்லை என்று செய்திவாசிப்பாளர் வரதராஜன் வெளியிட்ட வீடியோ வைரலாதன் பின்னணியில் திமுக ஐடி விங் இருப்பதாக அதிமுக சந்தேகிக்கிறது.

சென்னையில் எந்த மருத்துவமனையிலும் படுக்கை வசதிகள் இல்லை என்று செய்திவாசிப்பாளர் வரதராஜன் வெளியிட்ட வீடியோ வைரலாதன் பின்னணியில் திமுக ஐடி விங் இருப்பதாக அதிமுக சந்தேகிக்கிறது.

தூர்தர்சன், சன் நியூஸ் என ஒரு காலத்தில் முன்னணி செய்தி வாசிப்பாளராக வலம் வந்தவர் வரதராஜன். தற்போது நாடக நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார. சென்னையில் மிக முக்கியமான அதிகார மையங்களுடன் தொடர்பில் இருப்பவர். பிராமணர் என்பதால் சொல்லவே வேண்டாம் பெரிய அளவில் தொடர்புகளும் உண்டு. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றினார். துவக்கத்தில் மிகவும் சீரியசாக பேசிய வரதராஜன், சென்னையில் எந்த மருத்துவமனையிலும் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதி இல்லை என்று தெரிவித்தார்.

தனது நண்பர் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாத நிலையில் அவரை அட்மிட் செய்ய சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைகள் அனைத்தையும் தொடர்பு கொண்டதாகவும், அரசில் செயலாளர் வரை தொடர்பு கொண்டும் எந்த மருத்துவமனையிலும் இடம் கிடைக்கவில்லை என்று கண்கள் கலங்கினார். எனவே மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் வரதராஜன் உருக்கத்துடன் பேசினார். ஞாயிற்றுக்கிழமை வரதராஜன் வெளியிட்ட இந்த வீடியோ திங்களன்று திடீரென அனைத்து முன்னணி தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதனால் சென்னையில் கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனைகளில் இடம் இல்லை என்கிற தகவல் தீயாக பரவியது. இதனால் கொதித்து எழுந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்திவாசிப்பாளர் வரதராஜன் எந்த நண்பருக்கு எந்த மருத்துவமனையில் இடம் தேடினார் என்கிற விவரத்தை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இப்படி வதந்தி பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட வரதராஜன் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இதனை அடுத்து வரதராஜன் மீது இரவோடு இரவாக பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் வரதராஜன் வீடியோ திடீரென முன்னணி ஊடகங்களில் வெளியாக காரணம் திமுக தரப்பு தான் என்கிறார்கள். திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒரு நபர் அனைத்து செய்தி சேனல்களையும் தொடர்பு கொண்டு வீடியோவை ஒளிபரப்புமாறு கேட்டுக் கொண்டதால் அந்த சேனல்கள் அப்படியே அந்த வரதராஜன் வீடியோவை திரும்ப திரும்ப ஒளிபரப்பியதால். இதை எல்லாம் உண்மையில் வரதராஜன் கூட எதிர்பார்க்கவில்லையாம். ஏதோ விழிப்புணர்வுக்காக என்று தான் போட்டது அரசியல் ஆகிவிட்டதாக அவர் அதிர்ந்து போயுள்ளார்.

இந்த நிலையில் வழக்கு வேறு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததால் வரதராஜன் தற்போது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்து வருவதாக கூறுகிறார்கள். மேலும் வரதராஜனின் எந்த நண்பருக்கு உடல் நிலை சரியில்லை, அவர்கள் எந்தெந்த மருத்துவமனைக்கு சென்றார்கள், எப்போது சென்றார்கள், படுக்கை வசதி இல்லை என்று வரதராஜனை திருப்பி அனுப்பிய மருத்துவமனைகள் என்னென்ன? என்கிற விவரத்தை கூறுமாறு விரைவில் வரதராஜனுக்கு போலீசார் சம்மன் அனுப்ப உள்ளதாக கூறுகிறார்கள்.

இதனால் தனது வீடியோவை தேவையில்லாமல் வைரலாக்கி தனக்கு சிக்கலை உருவாக்கிவிட்டதாக அதற்கு காரணமானவர்கள் மீது கடும் டென்சனில் வரதராஜன் இருப்பதாகவும், அதே சமயம் அவருக்கு வேண்டியவர்கள் மற்றும் அரசுக்கு நெருக்கமானவர்கள் மூலமாக சமாதானப்படலம் நடைபெற்று வருவதாகவும் சொல்கிறார்கள்.

click me!