
சட்டமன்ற கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது, தெர்மாகோல் தெர்மாகோல் என கூறி திமுகவினர் கூச்சலிட்டனர். இதனால், அங்கு சிரிப்பலை எழுந்தது.
சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. அப்போது, கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு, பதில் அளிக்க தொடங்கினார்.
இதை பார்த்த திமுகவினர் ‘தெர்மாகோல்... தெர்மாகோல்...” என கோஷமிட்டனர். இதனால், சட்டமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.
ஆனால், அதை அவர் சிறிதும் பொருட்படுத்தாமல் தனது பேச்சை தொடர்ந்து கொண்டே இருந்தார்.
தமிழகத்தில் மழை இல்லாத காரணத்தால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரி, குளம் ஆகியவற்றை தூர் வாரும் பணியில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், கடும் வெயிலால் தண்ணீர் ஆவியாகிறது. இதனை தடுக்க தெர்மாகோல் வைக்கலாம் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். இதை தொடர்ந்து வைகை அணையில், தெர்மாகோல் வைத்து அந்த திட்டத்தையும் தொடங்கினார்.
தண்ணீர் ஆவியாக மாறுவதை தடுக்க, அமைச்சர் தெர்மகோல் வைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அதிகளவிலான கமான்ட்டுகளை வாரி இரைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தெர்மகோல் சம்பத்தையே, இன்று சட்டமன்றத்தில் திமுகவினர் கூறி, சிரிப்பலையை ஏற்படுத்திவிட்டனர்.