அமைச்சரோடு மோதும் தி.மு.க எம்.எல்.ஏ... தவிக்கும் அதிகாரிகள்..!

Published : Jun 24, 2021, 05:42 PM IST
அமைச்சரோடு மோதும் தி.மு.க எம்.எல்.ஏ... தவிக்கும் அதிகாரிகள்..!

சுருக்கம்

செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ., எழிலரசனை அமைச்சர் கண்டுகொள்வதே இல்லை எனக் கூறுகிறார்கள். 

திமுக அமைச்சருக்கும், எம்.எல்.ஏ.,வுக்கும் இடையில சிக்கி அதிகாரிகள் தவிப்பதாகக் கூறப்படுகிறது. சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு  மாவட்டத்துக்கு அமைச்சர் இல்லை. இதனால், அதற்கு பக்கத்து மாவட்ட அமைச்சரான ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தான், அந்த மாவட்டத்தில் நடக்கிற நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

 

ஆனால், செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ., எழிலரசனை அமைச்சர் கண்டுகொள்வதே இல்லை எனக் கூறுகிறார்கள். எம்.எல்.ஏ., தொகுதியில் நடக்கிற நிகழ்ச்சியில் மட்டும், அவர் பெயரை அழைப்பிதழில் போடுங்கள்.

பக்கத்து தொகுதிகளில் நடக்கிற விழாக்களில், அவர் பெயரை போடக் கூடாது என அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பரசன் நெருக்கடி கொடுப்பதாக கூறுகிறார்கள். இதனால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து எதுவும் கூறமுடியாமல் தவிக்கிறார்கள். எழிலரசன் 13 ஆண்டுகளாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருபெரும்புதூர் ஆகிய நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!