DMK : திமுக மீது ஊழல் புகார்.. அண்ணாமலை முதல்ல பேசட்டும்..அப்புறம் பாத்துக்குறோம்.! அமைச்சர் மஸ்தான் அதிரடி !

By Raghupati R  |  First Published Jun 6, 2022, 2:14 PM IST

Annamalai : பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் இவர்கள் மீதும் ஊழல் பட்டியல் கூறினார்கள். ஆனால் எந்த ஊழல் பட்டியலும் நிரூபிக்க முடியவில்லை. 


சிறுபான்மை நலன் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘’இந்த நாட்டில் எங்கள் மீது ஊழல் பட்டியல் சுமத்தாதவர்களே கிடையாது. பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் இவர்கள் மீதும் ஊழல் பட்டியல் கூறினார்கள். ஆனால் எந்த ஊழல் பட்டியலும் நிரூபிக்க முடியவில்லை. கலைஞரின் தொண்டர்கள் நாங்கள் எங்கள் மீது கூறும் அனைத்து பொய் புகார்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அண்ணாமலையின் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல தயாராக உள்ளோம். 

Tap to resize

Latest Videos

ஆனால், புகார் என்று சொன்னால் விசாரிக்க கூட தடை விதிக்க வேண்டும் என்று சொன்னவர்கள் கடந்த அமைச்சர்கள், அதை கூட தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார். அண்ணாமலை முழுமையாக அனைத்து விசயங்களையும் பேசட்டும் அதன் பின் அவர்களுக்கு பதில் அளிப்போம். மற்ற மாநிலங்களில் நடக்கும் சில விசயங்களை சுட்டிக்காட்டி தமிழகத்தில் பிரச்சினை ஏற்படுத்த பார்க்கிறார்கள். ஆனால் தமிழர்கள் அதற்கு இடமளிக்கமாட்டார்கள் இது தான் கடந்த கால வரலாறு. கடந்த ஆட்சியில் வெளிநாட்டில் இருப்பவர்கள் சடலம் வருவதற்கு ஆண்டு கண்ணக்கானது.

ஆனால் தற்போது 10 நாட்களில் கூட உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வாழ் தமிழர் நல வாரியம் அமைப்பதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நலவாரியம் அமைந்தவுடன் இதை விட வேகமாக செயல்பட முடியும், பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். மத்திய அரசு குறிப்பிட்ட அளவு சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை அளிக்க இலக்கை குறிப்பிட்டுள்ளது. இதனை அதிகரிக்க தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. மத்திய அரசு வழங்கவில்லை என்றால் உதவித்தொகை தமிழக அரசே வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது’ என்று கூறினார்.

undefined

இதையும் படிங்க : "வேற வழியில்லாம ஸ்விகி ஊழியரை அடித்தேன்!" சஸ்பெண்ட் போலீஸ்காரர் - ஆன்லைனில் கதறல் !!

இதையும் படிங்க : கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவில் கூட ஊழல்.. திமுக ஊழல் பெருச்சாளிகள் கூடாரம்.! அண்ணாமலை ஆவேசம் !

click me!