1.50 கோடி ரூபாய் அரசு நிதியில் பாரதமாதாவுக்கு ஆலயம்.. திமுக அமைச்சர் திறந்து வைத்தார்.

By Ezhilarasan BabuFirst Published Aug 2, 2021, 2:36 PM IST
Highlights

பாரத மாதாவுக்கு கோவில் கட்டவேண்டும் சுப்பிரமணிய சிவாவின் கனவு நிறைவேற வேண்டும் என பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்று வந்தது. பல்வேறு அரசியல் காரணங்களால் கடந்த 73 ஆண்டுகளாக  ஆலயம் அமைக்கும் பணி காலம்கடத்தப்பட்டுவந்தது. 

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தமிழக அரசு நிதி 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பாரத மாதா ஆலயத்தை தமிழக செய்தித்துறை அமைச்சர்  சாமிநாதன் திறந்து வைத்துள்ளார். அதில் 3.25 அடி உயரத்தில் பாரதமாதாவுக்கு வெங்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாரதமாதாவுக்கு சிலையுடன் கூடிய ஆலயம் அமைக்க வேண்டும் என்பது இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளின் ஒருவரான சுப்பிரமணிய சிவாவின்  பெருங் கனவு. அதற்காக அவர் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் 6 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் பாரத மாதாவுக்கு ஆலயம் அமைக்க  அடிக்கல் நாட்டினார்.  சுதந்திரப் போராட்டத்தின் போது அவர் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். அதையடுத்து அவரது கனவு பாதியிலேயே நின்று போனது, ஆனாலும் அவர் வைத்த கோரிக்கை தொடர்ந்து அப்பகுதி மக்களால் எழுப்பப்பட்டு வந்தது. 

பாரத மாதாவுக்கு கோவில் கட்டவேண்டும் சுப்பிரமணிய சிவாவின் கனவு நிறைவேற வேண்டும் என பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்று வந்தது. பல்வேறு அரசியல் காரணங்களால் கடந்த 73 ஆண்டுகளாக  ஆலயம் அமைக்கும் பணி காலம்கடத்தப்பட்டுவந்தது. இதில் கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் செய்தி மற்றும் விளம்பர துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது 1.50 கோடி செலவில் சுப்பிரமணிய சிவாவின் கனவை  நனவாக்கும் விதமாக பாரத மாதாவுக்கு ஆலயம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தற்போது சுப்ரமணியசிவா நினைவிடத்திற்கு அருகிலேயே நூலகத்துடன்கூடிய பாரதமாதா ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 3.25 அடி உயரத்தில் வெண்கல சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. பாரத மாதா ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா நடைபெற்றது, அதில் தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் கலந்துகொண்டு, பாரதமாதா சிலை மற்றும் ஆலயத்துடன் கூடிய நூலகத்தை திறந்து வைத்தார். அதில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

click me!