ஆளுநர் பதவியில் இருப்பவர் இப்படி பேசலாமா? தமிழிசையை சைலண்டாக வாரிய ராஜீவ் காந்தி..!

By vinoth kumar  |  First Published Oct 10, 2022, 7:15 AM IST

இது வாரிசு அரசியல் அடையாளம் ஆகிவிடுமோ என மக்கள் நினைக்கிறார்கள். ஏனென்றால் அண்ணன் தலைவர், தங்கை துணைப் பொதுச்செயலாளர். தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சியில் இப்படி வரும்போது வாரிசு அரசியல் என பலரும் நினைக்கக்கூடும். 


திமுகவின் துணை பொதுச்செயலாளராக எம்.பி.  கனிமொழி நியமிக்கப்பட்ட நிலையில் திமுக வாரிசு அரசியல் செய்வதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்த நிலையில் அவருக்கு திமுகவை சேர்ந்த ராஜீவ் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவராக 2வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல், பொதுச்செயலாளராக துரைமுருகன் இரண்டாவது முறையும்,  பொருளாளராக டி.ஆர்.பாலு, திமுக துணை பொதுச்செயலாளராக கனிமொழி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் தேர்வாகியிருக்கின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அண்ணன் திமுக தலைவர்..! தங்கை துணைப்பொதுச்செயலாளர்..! வாரிசு அரசியலை உறுதிப்படுத்துகிறது- தமிழிசை

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புதுச்சேரி ஆளுநர் சவுந்தரராஜன்;- தமிழக அரசியலைப் பொறுத்தவரை ஒரு பெண் உயர்வான இடத்திற்கு வருவது மிகவும் சிரமமான விஷயம்தான். அந்த இடத்திற்கு வந்திருக்கும் கனிமொழிக்கு வாழ்த்துகள். அதேநேரம் இது வாரிசு அரசியல் அடையாளம் ஆகிவிடுமோ என மக்கள் நினைக்கிறார்கள். ஏனென்றால் அண்ணன் தலைவர், தங்கை துணைப் பொதுச்செயலாளர். தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சியில் இப்படி வரும்போது வாரிசு அரசியல் என பலரும் நினைக்கக்கூடும். எப்படி இருந்தாலும் ஒரு பெண் பதவிக்கு வந்திருப்பதற்கு வாழ்த்துகள் என்றார். இவரது பேச்சுக்கு திமுகவின் தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்;- வாரிசு அரசியலை நோக்கி திமுக என தமிழிசை கூறுகிறார். ஆளுநர் பதவியில் இருப்பவர் இப்படி பேசலாமா?. 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் எந்த பிரிவு வாரிசு அரசியல் கூடாது என்று சொல்லி உள்ளது? ஆனால் அரசியலமைப்பு சட்டம் சரத்து 163 ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என சொல்லி உள்ளது. மீறாதீர் என  ராஜீவ் காந்தி பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க;-  பொன்னியின் செல்வன் குந்தவையாக மாறிய கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்.. அதிர்ச்சியில் தெலங்கானா முதல்வர் KCR !

click me!