சுமார் 85 ஆண்டுகளுக்கும் மேலாக ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடந்து வருகிற இந்து சமய மாநாட்டினை எதிர்த்து ஆளும் திமுக கட்சியின் அமைச்சரும், கட்சியினரும் கடந்த சில தினங்களாக திட்டமிட்ட ரீதியில் செய்து வருகின்ற இடையூறுகளைக் கண்டித்து சுவாமிஜி அவர்கள் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பேட்டி கொடுத்தார்.
இந்து ஆதரவு நிலைப்பாடு எடுத்திருக்கும் திமுக மேயர் மகேஷ் மண்டைக்காடு சமய மாநாடு சம்பந்தமாக இந்து மதத்திற்கு ஆதரவாக பேசுவதாகக் கூறிக்கொண்டு வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜ் அவர்களை மிரட்டுவது போன்று அறிக்கை கொடுத்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது என காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கன்னியாகுமரி மாவட்டத்தில் சமய வகுப்பு, திருவிளக்கு பூஜை மூலம் மிகபெரும் ஆன்மீக சேவைகளைச் செய்து வருபவர் இந்து தர்ம வித்யாபீட தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜ் அவர்கள். சுமார் 85 ஆண்டுகளுக்கும் மேலாக ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடந்து வருகிற இந்து சமய மாநாட்டினை எதிர்த்து ஆளும் திமுக கட்சியின் அமைச்சரும், கட்சியினரும் கடந்த சில தினங்களாக திட்டமிட்ட ரீதியில் செய்து வருகின்ற இடையூறுகளைக் கண்டித்து சுவாமிஜி அவர்கள் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பேட்டி கொடுத்தார். அவரது பேட்டி ஒட்டுமொத்த குமரி வாழ் ஹிந்து மக்களின் மனவெளிப்பாடு. இந்நிலையில் திடீர் இந்து ஆதரவு நிலைப்பாடு எடுத்திருக்கும் திமுக மேயர் மகேஷ் மண்டைக்காடு சமய மாநாடு சம்பந்தமாக இந்து மதத்திற்கு ஆதரவாக பேசுவதாகக் கூறிக்கொண்டு வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜ் அவர்களை மிரட்டுவது போன்று அறிக்கை கொடுத்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
இவர்கள் இந்து மதத்தையும், திமுக அரசையும், திமுக அமைச்சரையும் விமர்சித்து கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசிய போது எதிர்த்து அறிக்கை விட்டார்களா? இவர்கள் நோக்கம் இந்து மதத்தை குறிவைத்து தாக்குவதுதான். உண்மையிலேயே இவருக்கு ஹிந்துமதப் பற்று இருந்திருந்தால் பல ஆண்டுகளாக நடந்து வருகின்ற இந்து சமய மாநாட்டிற்கு இடையூறாக இருப்பது ஏன்? இத்தனை ஆண்டுகளாக சமயப் பெரியோர்கள் நடத்தி வந்த மாநாட்டை அரசு நடத்தும் என்று கூறும் திடீர் இந்துப் பற்றாளர்களான திமுக வினர் தாங்களே நடத்துவதாகக் கூறுவது என்பது மிகப்பெரும் சதியின் பின்னணி என்றே மக்கள் எண்ணுகிறார்கள்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவிற்கு கடைகள் அமைக்க கிறிஸ்தவ சர்ச் தரை வாடகை வசூலிப்பது பற்றி பேசாமல் இருப்பது ஏன்.? திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேமானது பக்தர்களின் பங்களிப்பு மூலம் தான் நடத்தப்பட்டதே தவிர திமுக அரசு அதற்கு எந்த விதமான செலவுகளையும் செய்யவில்லை. ஆளுங்கட்சி என்ற முறையில் திமுக அதில் விளம்பரத்தை தேடிக்கொண்டது. அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் இந்துக்கள் செலுத்தும் உண்டியல் பணத்தை எடுத்து தான் செலவு அரசு கோயில்களுக்கு செய்கிறதே தவிர அரசு எந்த வித செலவுகளையும் செய்வதில்லை என்பதை மக்களுக்குத் தெரியும்.
பக்தர்களிடம் நன்கொடை பெற்றுக்கொண்டு கோயில்களில் நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு அதற்கும் செலவு கணக்கு எழுதும் வேலையைத்தான் அறநிலையத்துறையும், அரசும் செய்து வருகிறது. அறநிலையத்துறை என்பது கோயில் வரவு, செலவு கணக்குகளை பார்ப்பதற்கு தானே தவிர கோயில் நிகழ்ச்சிகளில் தேவையில்லாமல் தலையிட கூடாது. ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடைபெறும் இந்து சமய மாநாடு வழக்கம்போல் நடைபெற வேண்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நடைபெறும் விளக்கேற்றி அம்மனிடம் பிரார்த்தனை மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டுபிரார்த்தனைக்கு இந்து முன்னணி தனது முழு ஆதரவையும் தெரிவித்து கொள்கிறது.
இந்த ஆன்மீக போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்கவில்லை எனில் கன்னியாகுமரி மாவட்ட ஒட்டு மொத்த இந்து சமுதாயமும் மிகப் பெரிய அளவில் போரட்டத்தில் இறங்கும் . எனவே, தமிழக முதல்வர் கன்னியாகுமரி மாவட்ட இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவிற்கு ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடைபெறும் இந்து சமய மாநாட்டை கடந்த காலங்களை போன்று நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று இந்துமுன்னணி வலியுறுத்துகிறது என காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.