ராணுவ வீரர் கொலை..! திமுக அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த அண்ணாமலை

By Ajmal Khan  |  First Published Feb 21, 2023, 11:12 AM IST

குடிதண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்த ராணுவ வீருக்கும் திமுக கவுன்சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்டார். இதனையடுத்து அவரது மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக சார்பாக சென்னையில் போராட்டம் நடைபெறுகிறது.


ராணுவ வீரர் கொலை

கிருஷ்கிரி மாவட்டம் போச்சம்பள்ளி  பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (50). இவர் நாகோஜனஹள்ளி பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ராணுவ வீரர்களான பிரபாகரன் குடிதண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்துள்ளார். இதை பார்த்த  கவுன்சிலர் சின்னசாமி இது பொது தண்ணீர் தொட்டி இதில் துணி துவைக்க கூடாது என்று கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராணுவ வீரர் பிரபாகரன் கவுன்சிலர் சின்னச்சாமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பேரூராட்சி உறுப்பினர் சின்னசாமி தனது குடும்ப உறுப்பினர்களுடன் சென்று ராணுவ வீரர்கள் பிரபு அவரது அண்ணன் மற்றோரு ராணுவவீரர் பிரபாகரன், தாயார் கண்ணம்மாள், தந்தை மாதையன், ஆகிய நான்கு பேரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். 

Tap to resize

Latest Videos

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..! எப்போது வழங்கப்படும் தெரியுமா..? உதயநிதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

போராட்டத்திற்கு அண்ணாமலை அழைப்பு

இதில் பலத்த காயமடைந்த ராணுவ வீரர் பிரபு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பாஜகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய திமுக கவுன்சிலரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்தநிலையில், இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்த அறிக்கையில், திமுகவினரின் அராஜகங்களும், அத்துமீறல்களும், குற்றச் செயல்களும், மக்கள்விரோதப் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பட்டப் பகலில், நாட்டைக் காக்கும் பிரபு என்கிற ராணுவ வீரர், திமுகவின் நிர்வாகியால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

போராட்டத்தில் முன்னாள் வீரர்கள்

 பாஜக பட்டியலினப் பிரிவின் தலைவர் தடா பெரியசாமி இல்லத்தின் மீதும், கார் மீதும் கொலை வெறி தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. எனவே திமுக ஆட்சியை கண்டித்து மாபெரும் அறப்போராட்டம் பிப்.21-ம் தேதி (இன்று) சென்னையில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

 

பேரணிக்கும் அழைப்பு விடுத்த பாஜக

இந்த போராட்டத்திற்கு பிறகு இன்று மாலை பாஜக சார்பாக கதமிழகம் இருண்ட காலத்தை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறது. என்பதை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் இருந்து, போர் நினைவுச் சின்னம் வரை திராவிட மாடல் இருளை போக்கும் விதமாக, மெழுகுவர்த்தி ஏந்தி மாபெரும் பேரணி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

பல்கலைக்கழகங்களை மதவெறி கூடங்களாக மாற்றிய ஆர்எஸ்எஸ்.! மனித குலத்திற்கு எதிரானவர்கள்- சீமான்

click me!