அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து திமுக சட்ட போராட்டம்.. அண்ணாமலையை எகிறி அடித்த அமைச்சர் அன்பில் மகேஸ்.

By Ezhilarasan BabuFirst Published Sep 14, 2021, 12:01 PM IST
Highlights

நீட் தேர்வு வைத்து அரசியல் செய்ய திமுக விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்திற்கு தமிழகத்தில் பாஜக தவிர அனைத்து கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளது. நீட் நுழைவுத் தேர்வு விலக்கு கோரி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து கட்சிகளுடன் ஒருங்கிணைந்த சட்டப் போராட்டத்தில் நடத்துவார் என அவர் எச்சரித்தார்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக திமுக முன்னெடுத்துள்ள சட்டப் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதேபோல் நீட் தேர்வை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது முதலே தமிழகத்தில் அதற்கான எதிர்ப்பு குரல்கள் தீவிரமாக இருந்து வருகிறது. இதுவரையில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். அதில் அரியலூர் மாணவி அனிதா மிக முக்கியமானவர். நேற்று சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த மாணவர் தனுஷ் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அரியலூர் அருகே சாத்தாம்பாடியில் நீட் தேர்வு எழுதிய கனிமொழி என்ற மாணவி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து மாணவர்களின் தற்கொலை சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக இரு கட்சிகளுமே நீட் தேர்வு ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்தன. ஆனால் திமுக இன்னும் ஒருபடி மேலே சென்று தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என பிரகடணம் செய்தது. இந்நிலையில் மாணவர்களின் தற்கொலைக்கு மத்தியில் நீட் தேர்வில் இருந்து முழுவதுமாக விளக்கு பெறுவதற்கு தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. திமுகவின் கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக உள்ளிட்ட கட்சிகளும் திமுக கொண்டு வந்த நீட்க்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்துள்ளன. இந்நிலையில் திமுக கொண்டு வந்துள்ள நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை தமிழக பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.  எத்தனை தீர்மானங்கள் கொண்டு வந்தாலும் நீர்த்தேவை அசைக்க முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவுக்கு சவால் விடுத்துள்ளார். 

இந்நிலையில் கோடம்பாக்கத்தில் தனியார் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செய்தியாளர்கள் சந்திப்பில், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக திமுகவின் சட்ட போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என பதிலடி கொடுத்துள்ளார். நீட் தேர்வு வைத்து அரசியல் செய்ய திமுக விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்திற்கு தமிழகத்தில் பாஜக தவிர அனைத்து கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளது. நீட் நுழைவுத் தேர்வு விலக்கு கோரி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து கட்சிகளுடன் ஒருங்கிணைந்த சட்டப் போராட்டத்தில் நடத்துவார் என அவர் எச்சரித்தார். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளி திறப்பு குறித்து அறிக்கை நாளை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இது தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று மாலை நடைபெறும் என அவர் கூறினார்.

 

click me!