திமுக தலைவர் விஜய்..!! அரசியல் களத்தை அதிரவைக்கும் அதிர்ச்சி சம்பவம்..!

Published : Feb 11, 2020, 11:27 AM IST
திமுக தலைவர் விஜய்..!!  அரசியல் களத்தை அதிரவைக்கும் அதிர்ச்சி சம்பவம்..!

சுருக்கம்

வருமான வரித்துறை சோதனைக்கு பிறகு திமுக விஜய்க்கு சப்போர்ட் செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் தயாநிதிமாறன் விஜய் விவகாரத்தை கிளப்பினார். இந்த விவகாரத்தை அரசியல் செய்ய களமாக்கி இருக்கிறனர். 

வருமான வரித்துறை சோதனைக்கு பிறகு திமுக விஜய்க்கு சப்போர்ட் செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் தயாநிதிமாறன் விஜய் விவகாரத்தை கிளப்பினார். இந்த விவகாரத்தை அரசியல் செய்ய களமாக்கி இருக்கிறனர். அப்படி ஒரு சம்பவம் தான் #திமுக_தலைவர்_விஜய். இந்த ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

 

அதில், ’தயாநிதி மாறன் டெல்லியில் விஜய்காக சப்போர்ட் பண்ணி பேசிய உடனே  அனைத்து உடன்பிறப்புகளும்  தீடீரென விஜய் ரசிகர்களாக மாறி விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என உருண்டு கிடக்கிறார்கள்.’’என்றும் ’’தளபதி விஜய்க்கு வந்த கூட்டத்தை பாருங்கள். மூன்று தலைமுறையாக கட்சியை கட்டுபாட்டில் வைத்திருக்கும் கருணாநிதி குடும்ப வாரிசு உதயநிதிக்கு வந்த கூட்டத்தை பாருங்கள். விஜய் தான் திமுக தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் என்பதற்கு வேறு உதாரணம் வேண்டுமா?’என பதிவிட்டுள்ளனர்.

 

’’இளைய தளபதி ஆனார் ஸ்டாலின்... ஆக உண்மை தளபதி என்றும் விஜய்தான் என்று புகழாரம். அறிவாலயத்தில் இன்று கோப்புகளில் கையெழுத்து போட்டு இன்று முதல் திமுக தலைவர் பொறுப்பை ஏற்கிறார் காவலன் விஜய். மிக விரைவில் நடிகர் விஜய் திமுக தலைவராக பதவியேற்க உள்ளார் என்று திமுக source களில் இருந்து தெரியவருகிறது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வழிநடத்த ஸ்டாலினுக்கு திறன் இல்லை என்று பிரசாந்த் கிஷோர் உணர்ந்தார் எனவே இந்த முடிவு எடுக்கப்படுகிறது’’ என பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். 
 

 

PREV
click me!

Recommended Stories

தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்
திருவனந்தபுரம் வெற்றியால் உற்சாகம்..! தமிழகம்- மேற்கு வங்கத்துக்கு பாஜக சவால்..!