மீண்டும் அரியணை ஏறுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்..! கடும் அதிர்ச்சியில் பாஜக..!

Published : Feb 11, 2020, 10:48 AM ISTUpdated : Feb 11, 2020, 12:10 PM IST
மீண்டும் அரியணை ஏறுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்..! கடும் அதிர்ச்சியில் பாஜக..!

சுருக்கம்

மொத்தம் இருக்கும் 70 தொகுதிகளில் அக்கட்சி 49 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆட்சியமைக்க 36 இடங்கள் தேவை என்கிற நிலையில் அக்கட்சி அதையும் கடந்து மிகப்பெரிய பெரும்பான்மையை பெற்று வருகிறது. இதனால் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி சட்டப்பேரவையில் மொத்தம் 70 தொகுதிகள் இருக்கின்றன. இங்கு கடந்த 8ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இங்கு ஆளும் கட்சியாக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.  விறுவிறுப்பாக நடந்த வாக்கு பதிவில் 62.59 வாக்குகள் பதிவாகி இருந்தன. தேர்தலுக்கு பிறகு வாக்கு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி அளவில் தொடங்கியது. ஆரம்பம் முதலே ஆளும் கட்சியான ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்து வருகிறது. மொத்தம் இருக்கும் 70 தொகுதிகளில் அக்கட்சி 49 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆட்சியமைக்க 36 இடங்கள் தேவை என்கிற நிலையில் அக்கட்சி அதையும் கடந்து மிகப்பெரிய பெரும்பான்மையை பெற்று வருகிறது. இதனால் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கட்சியின் தலைமையகத்தில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக காணப்படுகின்றனர்.

தேர்தலுக்கு பிறகு வெளியான கருத்து கணிப்பு முடிவுகளில் ஆளும் ஆம் ஆத்மி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அதை நிரூபிக்கும் வகையில் தற்போது வெளியாகும் முடிவுகள் அமைந்துள்ளன. இதனிடையே மத்தியில் ஆளும் பாஜக, 21 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதே போல இதற்கு முன்பாக டெல்லியில் ஆட்சி அமைத்திருந்த காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து வருகிறது. தற்போது வரையிலும் அக்கட்சி எந்த ஒரு இடத்திலும் முன்னிலை பெறவில்லை.

அசுர பலத்துடன் அடிச்சு தூக்கும் ஆம் ஆத்மி..! பாஜக, காங். திணறல்..!
 

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!