ஆரம்பம் முதலே ஆளும் கட்சியான ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்து வருகிறது. மொத்தம் இருக்கும் 70 தொகுதிகளில் அக்கட்சி 49 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
டெல்லி சட்டப்பேரவையில் மொத்தம் 70 தொகுதிகள் இருக்கின்றன. இங்கு கடந்த 8 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இங்கு ஆளும் கட்சியாக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. அனல் பறந்த பிரச்சாரத்தில் ஆளும் அரசின் சாதனைகளை கூறி ஆம் ஆத்மி வாக்குகள் கேட்டது. அதே போல மத்திய மோடி அரசின் திட்டங்களை விளக்கி பாஜக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது. தனது முந்தைய ஆட்சிகளின் சாதனைகளை கூறி காங்கிரஸ் வாக்குகள் கேட்டது.
undefined
விறுவிறுப்பாக நடந்த வாக்கு பதிவில் 62 .59 வாக்குகள் பதிவாகி இருந்தன. தேர்தலுக்கு பிறகு வாக்கு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி அளவில் தொடங்கியது. ஆரம்பம் முதலே ஆளும் கட்சியான ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்து வருகிறது. மொத்தம் இருக்கும் 70 தொகுதிகளில் அக்கட்சி 49 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பாரதிய ஜனதா கட்சி 21 இடங்களில் வெற்றி வாய்ப்பில் இருக்கிறது. இதற்கு முன்பாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது வரை எந்த ஒரு தொகுதியிலும் முன்னிலை பெற வில்லை. தற்போதுள்ள நிலவரப்படி ஆம் ஆத்மி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் தென்படுகின்றன. முன்னதாக தேர்தலுக்கு பிறகான கருத்து கணிப்பு முடிவுகளில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று முடிவுகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் அதள பாதாளத்திற்கு சென்ற காங்கிரஸ்..! அதிகமுறை ஆட்சியமைத்த கட்சிக்கு நேரும் அவமானம்..!