
ஓராண்டிற்கு பின் தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வருகை புரிந்துள்ளார். இதனால் தொண்டர்கள், நிர்வாகிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் திடீரென மூச்சுத்திணறல் அதிகமாகவே காவேரி மருத்துவமனையில் அனுமதிக்க்கப்பட்டார். நீண்ட நாள் சிகிச்சைக்கு பிறகு வீட்டிலிருந்து ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதனால் கருணாநிதி சட்ட சபைக்கு கூட வரத்தேவையில்லை என சபாநாயகரின் அனுமதி வாங்கினார் ஸ்டாலின்.
மூச்சுத் திணறலை சரிசெய்வதற்காக அவரது தொண்டையில் இடப்பட்ட ட்ரக்கியோஸ்டமி குழாய்கள் இன்னும் நீக்கப்படாமல் உள்ளது.
கடந்த ஓராண்டாக கோபாலபுரம் இல்லத்திலேயே தங்கியுள்ளார் கருணாநிதி. முதலில் பெரும்பாலும் யாரையும் சந்திக்கவில்லை. இப்போது சற்று உடல்நலம் தேறியுள்ளது.
இதையடுத்து பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சரத்குமார், திருனாவுக்கரசர், நல்லக்கண்ணு, உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.
அதற்கு கருணாநிதி சிரிப்பதும், கை அசைப்பதுமாக உள்ளார். தற்போது பேசுவதற்கு பழக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், ஓராண்டிற்கு பின் தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வருகை புரிந்துள்ளார். இதனால் தொண்டர்கள், நிர்வாகிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.