வேற லெவலில் யோசிக்கும் ஸ்டாலின்... அமைச்சர் சி.வி.சண்முகத்தை வீழ்த்த அவரது பரம எதிரியை களமிறக்கிய திமுக..!

By vinoth kumarFirst Published Mar 12, 2021, 3:45 PM IST
Highlights

விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகத்தை வீழ்த்த அதிமுகவில் இருந்து விலகி திமுக இணைந்த டாக்டர் லட்சுமணனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. 

விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகத்தை வீழ்த்த அதிமுகவில் இருந்து விலகி திமுக இணைந்த டாக்டர் லட்சுமணனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. 

திமுக கூட்டணி தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து களம் காண்கிறது. இதில் திமுக மட்டும் 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான பட்டியல் 2 நாட்களுக்கு முன்னரே வெளியாகும் என எதிர்ப்பார்த்த நிலையில் விசிக, மார்க்சிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டில் சிக்கல் ஏற்பட்டது. நேற்று மாலை மதிமுகவும், இரவு விசிக, மார்க்சிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இறுதிப்படுத்தப்பட்டன. இதையடுத்து இன்று திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில், விழுப்புரம் தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர் லட்சுமணன் களமிறக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியில் ஏற்கனவே தொடர்ந்து 2 முறை அதிமுக வேட்பாளரான சி.வி.சண்முகம் வெற்றி பெற்றுள்ளதால் தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் ஹாட்ரிக் வெற்றி பெற்று தொகுதியை அதிமுக வசம் தக்க வைக்கும் முனைப்பில் அமைச்சர் சி.வி.சண்முகமே மீண்டும் 3-வது முறையாக வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இந்த தொகுதியில் வன்னியர்கள், ஆதிதிராவிடர்கள் அதிகமாக வசிக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக உடையார், நாயுடு, ரெட்டியார், செட்டியார் மக்களும் அதிகம் வசிக்கும் தொகுதியாக உள்ளது. அதுபோல் முஸ்லிம்கள், கிறிஸ்தவ மக்களும் பரவலாக வசிக்கின்றனர்.

இதற்கிடையே, அமைச்சரை எதிர்த்து முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யுமாக இருந்த டாக்டர் லட்சுமணன் திமுக சார்பில் போட்டியிடுகிறார். சி.வி.சண்முகம் மற்றும் டாக்டர்  லட்சுமணன் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

click me!