வேகம் பத்தாது.. கொரோனா நடவடிக்கையில் பின்தங்கிய திமுக.. ஸ்டாலினை கடுப்பாக்கும் செல்லூர் ராஜு..!

By vinoth kumarFirst Published May 17, 2021, 5:21 PM IST
Highlights

அதிமுக ஆட்சியின்போது ஊரடங்கை நீட்டிக்க கூடாது என வலியுறுத்திய முதல்வர் தற்போது ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது வேடிக்கையாக உள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சியின்போது ஊரடங்கை நீட்டிக்க கூடாது என வலியுறுத்திய முதல்வர் தற்போது ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது வேடிக்கையாக உள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு;-  முதல்வர் ஸ்டாலின் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டுமென நினைக்கிறார். மக்களின் தேவையை பூர்த்தி செய்தால் திமுக அரசை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். திமுக அரசை பற்றி குறை சொல்ல வேண்டும் என்றால் ஆயிரம் குறை சொல்லலாம். எடுத்தவுடன் ஆளும் அரசை குறை சொல்ல கூடாது என்பதற்காகவே குறை சொல்வதில்லை. 

கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது உள்ள அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை சொல்ல முடியுமா..? மதுரையில் 500 ஆக்சிஜன் படுக்கை விரிவுபடுத்தப்படும் என தெரிவித்துள்ள மருத்துவ துறை அமைச்சர் அதற்கான செவிலியர்கள், மருத்துவர்கள் கூடுதலாக நியமிப்பது குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.

அதிமுக ஆட்சியின்போது ஊரடங்கை நீட்டிக்க கூடாது என வலியுறுத்திய முதல்வர் தற்போது ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது வேடிக்கையாக உள்ளது.பிரதமர் பாராட்டும் அளவிற்கு, அதிமுக அரசு செயல்பட்டது. ஆனால், தற்போது பாராட்டும் அளவிற்கு உள்ளதா என்பதை கவனத்தில் கொண்டு மருத்துவ துறை அமைச்சர் கடந்த ஆட்சியை குறை சொல்லாமல் செயல்பட வேண்டும்.  திமுக மீண்டும் அராஜகத்தை தலை தூக்குவது அவர்களுக்கு எதிர்காலத்திற்கு உகந்ததாக இருக்காது என  செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
 

click me!