ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டிய கனிமொழி!

Published : Dec 05, 2018, 02:00 PM IST
ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டிய கனிமொழி!

சுருக்கம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர் என்று திமுக மகளிரணிச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி புகழாரம் சூட்டியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர் என்று திமுக மகளிரணிச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி புகழாரம் சூட்டியுள்ளார்.

ஜெயலலிதா திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். இந்நிலையில் அவரது 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

இதையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் அமுமக சார்பில் இன்று அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  

இந்நிலையில் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக மகளிரணிச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி ட்வீட் செய்துள்ளார். அதில் ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் உலகில் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு சமாளிப்பது அத்தனை எளிதான காரியமல்ல. மேலும் அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்று வலம் வந்தவர். ஆனால், அவரின் இறுதி நாட்களில் அவர் மரணம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!