இந்த விஷயத்தில் திமுகவினர் கில்லாடிகள்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.

Published : Aug 03, 2021, 12:12 PM IST
இந்த விஷயத்தில் திமுகவினர் கில்லாடிகள்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.

சுருக்கம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது; வரலாற்றில் இட ஒதுக்கீடு என்று எடுத்து கொண்டால், அது அதிமுகாவால்தான் நிறைவேறி இருக்கும். இப்போது இந்த ஒ.பி.சி இட ஒதுக்கீட்டிற்கும் நாங்கள் தான் காரணம்.  

தீரன் சின்னமலையின் 216 வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு எதிர்கட்சி துணை தலைவர் ஒ. பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார் பெஞ்சமின், எல். பி வேலுமணி ஆகியோர் மரியாதை செலுத்தினர். முன்னதாக அதிமுக சார்பில் தீரன் சின்னமலை சிலைக்கு ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது; வரலாற்றில் இட ஒதுக்கீடு என்று எடுத்து கொண்டால்  அது அதிமுகாவால்தான் நிறைவேறி இருக்கும். இப்போது இந்த ஒ.பி.சி இட ஒதுக்கீட்டிற்கும் நாங்கள் தான் காரணம்.எடப்பாடி பழனிசாமி ஒபிசி இட ஒதுக்கீட்டிற்கு கொடுத்த அழுத்தின் காரணமாக ஒ.பி.சி 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது. அதிமுகவால் பாதுகாக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு விஷயத்தில் மக்களை ஏமாற்றுவத்தில் புத்திசாலிகள் திமுகவினர். 27% இட ஒதுக்கீட்டிற்கு காரணம் அதிமுக தான், இதில் ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடாத திமுகவினர் அதற்கு உரிமை கொண்டாடுகின்றனர். 

வரலாற்றைத் திசை திருப்பி மக்களை ஏமாற்றுவதில் பெருமளவு புத்திசாலிகள் திமுகவினர். மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் நிகழ்சிகள் அதிகரித்துள்ளது. சமீபகாலமாக அதிக அளவில்  தாக்கப்படுகின்றனர். இது குறித்து எங்களது மேலவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள்.சுதந்திரம் பெற்று இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி கணக்கில் கொண்டால், தமிழ்நாடு சட்டமன்றம் 1921 ல் இல்லை 1952 ல் தான் தமிழ்நாடு சட்டமன்றம் உருவானது. ஆனால் வரலாற்றை திரிக்கின்றனர். என ஆவர் கூறினார். 
 

PREV
click me!

Recommended Stories

ஒரே நேரத்தில் தமிழகத்தில் கால்பதிக்கும் பிரதமர் மோடி-ராகுல் காந்தி.. களைகட்டும் அரசியல் களம்!
திமுகவிடம் சில தலைவர்கள் வாங்கி தின்கிறார்கள்..! ஸ்டாலினை தொடர்ந்து மிரட்டும் காங்கிரஸ்..!