அந்த விஷயத்தில் மட்டுமே குறியாக இருக்கும் திமுக... வானதி சீனிவாசன் சொன்ன சீக்ரெட்..!

Published : Aug 21, 2021, 04:11 PM IST
அந்த விஷயத்தில்  மட்டுமே குறியாக இருக்கும் திமுக... வானதி சீனிவாசன் சொன்ன சீக்ரெட்..!

சுருக்கம்

அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் உள்ள குறைகளை கண்டறிவதிலேயே திமுக அரசு நேரம் செலவிடாமல் ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளிலும் நேரத்தை செலவிடலாம்.

அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் உள்ள குறைகளை கண்டறிவதிலேயே, திமுக அரசு நேரம் செலவிடாமல் ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் நேரத்தை செலவிடலாம் என பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கொன்றில் நடைபெற்றது. மேலும் ‘மோடி மகள் நலத்திட்ட உதவிகள்’ வழங்கும் நிகழ்ச்சியும் அப்போது நடைபெற்றது.

இந்த விழாவில்  சிறப்பு அழைப்பாளராக வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். அங்கு பேசிய அவர்,  “அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்த புகார் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதேநேரம் அ

திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் உள்ள குறைகளை கண்டறிவதிலேயே திமுக அரசு நேரம் செலவிடாமல் ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளிலும் நேரத்தை செலவிடலாம்.

மக்களின் நலத் திட்டங்களுக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கும் விஷயத்தில், தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், மத்திய அரசை பாராட்ட மனம் இல்லாமல் இருக்கிறார். எந்தெந்த திட்டங்களுக்காக மத்திய அரசு, மாநில அரசின் வாயிலாக நிதிகளை பகிர்ந்தளிக்க வேண்டும் என்று அமைச்சர் விளக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். 
 

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!