திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை.. திடீரென இறங்கி வந்த மு.க.ஸ்டாலின்.. வேலுமணி திருப்பி அடித்த கதை..!

By Selva KathirFirst Published Jul 21, 2020, 10:35 AM IST
Highlights

இந்துக்களின் முதன்மையான கடவுளான முருகப்பெருமானை இழித்தும் பழித்தும் பேசிய கறுப்பர் கூட்டத்துடன் திமுக நிர்வாகிகள் மற்றும் திமுகவுடன் இணக்கமாக இருப்பவர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தது அம்பலமான காரணத்தினால் தான் மு.க.ஸ்டாலின் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்துக்களின் முதன்மையான கடவுளான முருகப்பெருமானை இழித்தும் பழித்தும் பேசிய கறுப்பர் கூட்டத்துடன் திமுக நிர்வாகிகள் மற்றும் திமுகவுடன் இணக்கமாக இருப்பவர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தது அம்பலமான காரணத்தினால் தான் மு.க.ஸ்டாலின் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

முருக கடவுளை கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் பேசிய பேச்சுகள் ஒட்டு மொத்த இந்துக்களையும் கொதித்து எழ வைத்தது. இப்படி ஒருவர் தமிழ் கடவுளை பேச முடியுமா? என இந்துக்கள் ஒவ்வொவரும் வேதனை தெரிவிக்க ஆரம்பித்தனர். இந்த விவகாரத்தை பாஜக மற்றும் இந்து ஆதரவு இயக்கங்கள் வீடுகள் தோறுமான பிரச்சாரமாக முன்னெடுத்தனர். இதனால் கறுப்பர் கூட்டத்திற்கு தமிழகம் மட்டும் இல்லாமல் தமிழர்கள் வாழும் இடங்கள் அனைத்திலும் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன.

பாஜக அளித்த புகாரின் அடிப்படையில் கறுப்பர் கூட்ட நிர்வாகிகளை உடனடியாக கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். ஆனால் இத்தோடு பிரச்சனை முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரச்சனை முடியவில்லை. கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தன. ஆனால் திமுக மட்டும் இந்த விவகாரத்தில் அமைதி காத்தது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது பாஜக. அனைத்து விஷயங்களுக்கும் கண்டனம் தெரிவிக்கும் திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் கடவுளான முருகனை இழிவு செய்தவர்களை கண்டிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.

இதற்கிடையே கறுப்பர் கூட்ட நிர்வாகி செந்தில் வாசன் திமுகவின் ஐடி விங் செயலாளர் தியாகராஜன் உடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. மேலும் முருகப் பெருமானை அவதூறு செய்த சுரேந்திரன் திக மற்றும் தொடர்புடைய நிர்வாகிகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இதனை கெட்டியாக பிடித்துக் கொண்ட பாஜக சுரேந்திரன் உள்ளிட்ட கறுப்பர் கூட்ட நிர்வாகிகள் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த புகைப்படங்களை வெளியிட்டது. இதனால் கறுப்பர் கூட்டத்திற்கும் திமுகவிற்கும் தொடர்பு என்பது போல் தகவல்கள் பரவின.

அதுநாள் வரை அமைதி காத்த திமுக திடீரென அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை அனுப்பி கறுப்பர் கூட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்க வைத்தது. மேலும் திமுகவில் ஒரு கோடி இந்துக்கள் இருப்பதாகவும் பேட்டி அளிக்க வைத்தது. ஆனாலும் கூட விடாமல் இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் ஏன் மவுனம் காக்கிறார், தமிழ் கடவுளுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஸ்டாலின் குரல் கொடுக்கமாட்டாரா? என்று கேள்விகள் எழுந்தன. அதிலும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒரு படி மேலே சென்று ஸ்டாலினை சீண்டி தொடர்ந்து அறிக்கை மேல் அறிக்கை வெளியிட்டார்.

இந்த அறிக்கைகள் சமூக வலைதளங்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தின. மேலும் திமுக இந்துவிரோத கட்சி என்பது போன்ற தோற்றமும் இயல்பாகவே உருவானது. இந்த நிலையில் தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிக நீண்ட ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கறுப்பர் கூட்டர், முருகப்பெருமான் குறித்து ஸ்டாலின் வழக்கம் போல் எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் திமுகவை இந்துவிரோத கட்சி என்று சித்தரிக்க முயற்சிக்கிறார்கள் ஆனால் நாங்கள் அப்படி இல்லை என்று சொல்ல முயற்சி செய்துள்ளார். அதாவது ஒரு கட்சித் தலைவர் தன் கட்சி இந்துக்களுக்கு விரோதமானது இல்லை என்று அறிக்கை வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதற்கு முழுக்க முழுக்க தமிழக பாஜக  தலைவர் முருகன், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தான் காரணம் என்று கூறலாம். ஏனென்றால் இந்த விஷயத்தை தொடர்ந்து அணைந்து விடாமல் ஸ்டாலினை அறிக்கை வெளியிடும் வரை சீண்டிக் கொண்டே இருந்தது இவர்கள் இருவர் தான்.  அதிலும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் எல்லாம் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு வந்த நிலையில் அதையெல்லாம் மனதில் வைத்து தான் முருகர் விவகாரத்தில் ஸ்டாலினுக்கு எஸ்பி வேலுமணி தரமான பதிலடி கொடுத்துள்ளார் என்கிறார்கள்.

click me!