நாகரிக அரசியல் பேச்சைவிட்டு, ஆபாச பிரசாரங்கள் தமிழக அரசியலில் விஸ்வரூபம் எடுக்கிறதா? திமுக ஒரு எடுத்துக்காட்டு

By Asianet TamilFirst Published Mar 31, 2021, 1:09 PM IST
Highlights

திமுக மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் ஆபாசமாகவும், பொதுமக்கள் அருவருக்க தக்க வகையிலும் இருக்கிறது என்று பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆளுங்கட்சியை குறை சொல்லி வாக்கு சேகரிக்கும் முறை போய் ஆபாசமாக பேசி வாக்கு சேகரிக்கும் முறையை திமுக மேற்கொண்டு வருகிறது.

திமுக மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் ஆபாசமாகவும், பொதுமக்கள் அருவருக்க தக்க வகையிலும் இருக்கிறது என்று பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆளுங்கட்சியை குறை சொல்லி வாக்கு சேகரிக்கும் முறை போய் ஆபாசமாக பேசி வாக்கு சேகரிக்கும் முறையை திமுக மேற்கொண்டு வருகிறது.

சட்டமன்ற தேர்தலை சந்திக்க ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் களம் அனலை கிளப்பி வருகிறது. தேர்தல் பிரச்சாரங்களில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மிகவும் ஆபாசமான வார்த்தைகள் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது பொது மக்களை எரிச்சலுக்கு உள்ளாக்குகிறது. குறிப்பாக ஆ. ராஜா தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறப்பு குறித்தும் அவருடைய தாயார் குறித்தும் ஆபாசமாக பேசியது மாநிலம் முழுவதும் பேசும் பொருளாக மாறியது. “நான் பேசியதை வெட்டியும் ஒட்டியும் செய்திருக்கிறார்கள், நான் எதுவும் தவறாக பேசவில்லை மக்கள் தவறாக புரிந்து கொண்டால் நான் எதுவும் செய்ய முடியாது” என்று ஆணவமாக பதில் கூறினார். ஒரு சாமானியன் முதலமைச்சரானால் இப்படி தான் பேசுவார்களா ? என்று முதல்வர் கருத்து தெரிவித்தார். அதன் பின் கட்சி தலைமை அறிவுறுத்தியத்தின் பெயரில் வேண்டா விருப்பமாக மன்னிப்பு கடிதத்தை கேமராக்கள் முன்னாடி வாசித்து சென்று விட்டார்.

இதையடுத்து திமுகவின் வளர்ந்து வரும் சாக்ரடீஸ் உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தின் போது “மத்திய அரசு சொன்னால் முதல்வர் அப்படியே கேட்பார். நில்லுன்னா நிப்பாரு, உக்காருன்னா உக்காருவாரு, முட்டி போடுன்னா முட்டி போடுவாரு, அப்பறம் என்ன செய்வாரு” என்று தொண்டர்களை பார்த்து கேட்கும் போது தொண்டர்களில் ஒருவர் மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் முதல்வரை விமர்சித்தார். தொண்டர்களை தூண்டிவிட்டு அவ்வாறு பேச வைத்து விட்டு, “ஒரு முதல்வரை அப்படியா பேசுவீங்க, அப்படியெல்லாம் பேச கூடாது” எனக் கூறி தான் ஒரு நடிகன் என்பதை நிரூபித்தார்.  

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய தயாநிதி மாறன், அதிமுக நிர்வாகி ராஜேந்திர பாலாஜி சொன்னதாக சொல்லி “ஜெயலலிதா எங்களுக்கு மம்மி, நரேந்திர மோடி எங்களுக்கு டாடி” என்று மறைமுகமாக விமர்சித்தார். தேர்தல் பரப்புரையின் போது மூத்த அரசியல்வாதிகள் என்ற வயது வரம்பு கூட இல்லாமல் திமுகவினர் தொடர்ந்து இவ்வாறு பிரச்சாரங்களில் பேசி வருகின்றனர். இது தான் திமுகவின் கலாச்சாரம் என்று பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஒரு முதல்வருக்கே இந்த நிலைமை என்றால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொது மக்களை எப்படி பேசுவார்கள் என்று முதலமைச்சரே தெரிவித்தார். 10 வருடங்களாக ஆட்சியில் இல்லாத விரக்தியிலும், எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என திமுகவினர் அனைவரும் ஆபாச பேச்சுக்களை கையில் எடுத்திருக்கிறார்கள் என அரசியல் நோக்கர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களும், ஆஷ்டாக்குகளும் பதிவு செய்து வருகின்றனர். திமுக ஆட்சியை பிடிக்க எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு அவர்கள் மேற்கொள்ளும் பிரச்சார பேச்சுக்களிலே தெரிகிறது என பிறக்கட்சி தலைவர்கள் விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.

click me!