சென்னையில் 3 விழுக்காடாக இருந்த கொரோனா தொற்று 4.5 சதவீதமாக உயர்வு. சுகாதாரத்துறை செயலாளர் பகீர்.

By Ezhilarasan BabuFirst Published Mar 31, 2021, 12:57 PM IST
Highlights

சென்னையில் 3 விழுக்காடாக இருந்த தொற்று தற்பொழுத 4.5 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது என மக்களே தெரிவிக்கின்றனர்.  

தமிழகத்தில் இளைஞர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அனைவரும் முககவசம் அணிந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலர் வேண்டுகோள்விடுத்துள்ளார். 

சென்னை கிண்டி கொரோனா மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், டெல்லி, மகாராஸ்டிரா போன்ற 10 நகரங்களில் கொரோனா தொற்று அதிகம் உள்ளது. ஆனால் அதில் சென்னை இல்லை. இருந்தாலும் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. சென்னையில் 3 விழுக்காடாக இருந்த தொற்று தற்பொழுத 4.5 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது என மக்களே தெரிவிக்கின்றனர். 

1,124 பேர் சென்னையில் உள்ள 4 அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் சென்னையில்  4,368 படுக்கைகளும், தமிழகம் முழுவதும் 56 ஆயிரம் படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளது. 70 ஆயிரம் படுக்கைகள் கோவிட் கேர் மையங்களில் தயார் நிலையில் உள்ளது. மருத்துவ பணியாளர்கள் போர் வீரர்கள்போன்று உயிரை பணயம் வைத்து போராடுகின்றனர். இதனை மக்கள் கருத்தில் கொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தொற்று கூடுதலாக பதிவாகும் இடங்களை கண்டறியப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் சென்னையில் 600 இடங்களுக்கு மேல் கட்டுப்படுத்த பகுதிகளாக மாறியுள்ளது. இதனால் மக்கள் அதிம் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும். முககவசம் அணிய வேண்டும், தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. ஆனால்  இறப்பு எண்ணிக்கை அதிகமாகிறது. இதனை குறைக்க நடவடுக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

தமிழகத்திற்கு கூடுதலாக 10,40,000 கோவிஷீல்டு தடுப்பூசியும், 2 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள் 2ம் தேதி வர உள்ளது. தனியார் மருத்துமனைகளில் தடுப்பூசியை அதிக விலைக்கு போடுவது குறித்து புகார் வந்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறினார். 80% அரசு மருத்துவமனைகளிலும், 20% தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். 18 வயதுக்குட்பட்ட கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் விகிதம் 8%, 18 வயது முதல் 45 வயதுடைய நபர்களுக்கு 50% க்கும் மேல் உறுதியாகியுள்ளது. இதனால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். அரசியல் கட்சி கூட்டங்களில் அரசியல் தலைவர்கள் மக்களை முககவசம் அணிந்து வர சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். 

 

click me!