கூட்டணி நிறைவு பெற்றும் தீராத குழப்பத்தில் திமுக... சிக்கலில் திருமா- வைகோ..!

By Thiraviaraj RMFirst Published Mar 5, 2019, 2:44 PM IST
Highlights

திமுக கூட்டணி நிறைவு பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அற்விக்கப்பட்டாலும் விசிக, மதிமுக எந்தச் சின்னத்தில் போட்டியிடப்போகிறது என முடிவு செய்யாமல் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
 

திமுக கூட்டணி நிறைவு பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அற்விக்கப்பட்டாலும் விசிக, மதிமுக எந்தச் சின்னத்தில் போட்டியிடப்போகிறது என முடிவு செய்யாமல் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் 7 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில், காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-1, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, பாரிவேந்தரின் ஐஜேகே கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் கடைசியாக மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டு உடன்பாடு ஏற்பட்டது. 

இந்த ஏழு கட்சிகளில் காங்கிரஸ் கை சின்னத்திலும், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தங்களது சின்னத்திலும் போட்டியிட உள்ளனர். கொங்கு மக்கள் தேசிய கட்சி, இந்தியன் முஸ்லீம் லீக், ஐஜேகே ஆகிய கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியையும், மதிமுகவையும் திமுக சின்னத்தில் போட்டியிடக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அக்கட்சியினர் இது குறித்து தங்களது கட்சி நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து முடிவை அறிவிப்பதாக தெரிவிதுள்ளனர்.

 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின் மதிமுகவும், விசிகவும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முடிவை அவர்கள்தான் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த முடிவை இருகட்சிகளும் ஏற்குமா? என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், திமுக கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது.   
 

click me!