ஒரு கட்சியை கழற்றிவிட்டு 7 கட்சிகளுடன் கூட்டணி... திமுக 20 தொகுதிகளில் போட்டி!

By Thiraviaraj RMFirst Published Mar 5, 2019, 1:46 PM IST
Highlights

17வது மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் 7 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள திமுக 20 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

17வது மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் 7 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள திமுக 20 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

திமுக கூட்டணியில், காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-1, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, பாரிவேந்தரின் ஐஜேகே கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் கடைசியாக மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டு உடன்பாடு ஏற்பட்டது.

 

மனித நேய மக்கள் கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. ஆனால், அக்கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் கூறுகையில், மனித நேய மக்கள் கட்சி எங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், தொகுதிகள் ஒதுக்க முடியவில்லை. எங்களுக்கு ஆதரவளித்தால் பின் வரும் காலங்களில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்’’ எனத் தெரிவித்தார். 

திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு நிறைவடைந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திமுக 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போயிடும் என்கிற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.  

click me!