எவ்வளவு பட்டும் திமுக இன்னும் திருந்தவில்லை.. அதற்கான தண்டனையை மக்கள் நிச்சயம் கொடுப்பார்கள்.. டிடிவி. ஆவேசம்

By vinoth kumarFirst Published Jun 9, 2022, 6:23 AM IST
Highlights

தமிழகத்தில் ஓராண்டு திமுக ஆட்சி ஏமாற்றமளிக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், திராவிடர்கள் தலைகுனியும் வகையில், மக்களை ஏமாற்றும் ஆட்சியாக உள்ளது. திமுக ஆட்சியில் காவல்துறையில் தலையீடு அதிகம் இருக்கிறது.

அதிமுகவை மீட்க வேண்டும், ஜெயலலிதா ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம் என டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

ஈரோட்டில் நடந்த அமமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன்;- தமிழகத்தில் ஓராண்டு திமுக ஆட்சி ஏமாற்றமளிக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், திராவிடர்கள் தலைகுனியும் வகையில், மக்களை ஏமாற்றும் ஆட்சியாக உள்ளது. திமுக ஆட்சியில் காவல்துறையில் தலையீடு அதிகம் இருக்கிறது. ரவுடிகள் நடமாட்டம் அதிகரித்து, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. திமுக கொடியை கட்டிக் கொண்டு ரவுடிகள் தமிழகம் முழுவதும் வலம் வருகின்றனர். 

திமுக இன்னும் திருந்தவில்லை. மக்கள் அதற்கான தண்டனையைக் கொடுப்பார்கள். விடியல் ஆட்சி என்பது மக்களை ஏமாற்றி, பொய்யாக செயலாற்றி வருவதாக குற்றம்சாட்டினார். ஆளுங்கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், எதிர்கட்சிகள் போராடும். தங்கள் மடியில் கனமிருப்பதால், திமுக ஆட்சியின் குறைகள் குறித்து அதிமுகவினர் பேச மாட்டார்கள். பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளை அரசு எதிர்கொள்ள வேண்டும். அவை பொய் என்றால், சட்டப்படி வழக்கு தொடர வேண்டும். 

அதிமுகவை மீட்க வேண்டும், ஜெயலலிதா ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம். இதே நோக்கத்திற்காக சசிகலா, சட்டரீதியாகப் போராடுகிறார். நாங்கள் ஜனநாயக ரீதியாகப் போராடுகிறோம். எங்கள் இருவரின் நோக்கம் ஒன்றாக இருந்தாலும், பாதைகள் வேறாக உள்ளன. திமுகவிற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இந்து கோயில்களையும் கண்காணிக்கும் பொறுப்பு உள்ளது என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க;- அதிமுக- அமமுக இணைப்பா? போசுக்கு டிடிவி. தினகரன் இப்படி சொல்லிட்டாரு.. அதிர்ச்சியில் தொண்டர்கள்..!

click me!