எடப்பாடி பழனிசாமியிடம் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வலியுறுத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியிடம் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமானத்தில் வந்த ஒருவர் விமர்சித்ததை அடுத்து எடப்பாடி பழனிச்சாமியுடன் வந்தவர்கள் அந்த நபரை தாக்கியுள்ளனர். இதை அடுத்து தாக்குதலுக்குள்ளானவர் மதுரை அவனியாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையும் படிங்க: ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்... டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!!
அதன்பேரில் எடப்பாடி பழனிச்சாமி உட்பட ஆறு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ததற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி மீது போடப்பட்டுள்ள வழக்கை கண்டித்தும் உடனடியாக அந்த வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மார்ச்.21 அன்று திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்... அறிவித்தார் அரசு கொறடா கோவி. செழியன்!!
அப்போது பேசிய காமராஜ், எடப்பாடி பழனிசாமி மீது திமுக அரசு பதற்றத்தில் பொய் வழக்கு போட்டுள்ளது. பொய் வழக்கு தொடர்பாக பழனிசாமியிடம் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட பொய் வழக்கை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். எடப்பாடி பழனிசாமி மீது திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது. நெல் மூட்டைகள் மட்டுமல்ல, நாடு முழுவதும் எல்லாமே தேக்கமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.