திமுக அரசு முறையாக கையாளவில்லை.. கள்ளக்குறிச்சி விவகாரம் - டிடிவி தினகரன் ஆவேசம் !

By Raghupati RFirst Published Jul 17, 2022, 4:41 PM IST
Highlights

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த பிரச்னையை திமுக அரசு சரியான முறையில் கையாளாததால் அந்தப் பகுதியில் வன்முறை வெடித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி 12ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பள்ளி விடுதி வளாகத்தில் மாணவி அடிப்பட்ட நிலையில் கண்ட விடுதி காவலர் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்த பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் வரும் நிலையில், மாணவியின் பெற்றோர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் இன்று வன்முறை வெடித்தது. அதில் கல்வீச்சு தாக்குதல், காவலர்கள் மீது தாக்குதல் ஆகியவை நடைபெற்றது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி லைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கப்போகுது.. மக்களே உஷார் !

இந்த சம்பவம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் ட்விட்டர் பக்கத்தில், ‘கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த பிரச்னையை திமுக அரசு சரியான முறையில் கையாளாததால் அந்தப் பகுதியில் வன்முறை வெடித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.  

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த பிரச்னையை தி.மு.க. அரசு சரியான முறையில் கையாளாததால் அந்தப் பகுதியில் வன்முறை வெடித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. (1/3)

— TTV Dhinakaran (@TTVDhinakaran)

பாதிக்கப்பட்டவர்களின் குரலை செவிமடுத்து கேட்டு ஆரம்பத்திலேயே காவல்துறையினர் அக்கறையுடன் செயல்பட்டிருந்தால் இந்தச் சூழல் ஏற்பட்டிருக்காது. இதன் பிறகும் பிரச்னையை மேலும் பெரிதாக்காமல் அங்கே அமைதி திரும்புவதற்கும் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைப்பதற்கும் தமிழக அரசு ஒரு கணமும் தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்? பதவி தான் முக்கியமா? திமுகவை பொளந்த அண்ணாமலை

click me!