நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் நம்பிக்கை துரோகம் செய்யும் திமுக அரசு.. அம்பலப்படுத்தும் டிடிவி.தினகரன்.!

Published : Mar 18, 2022, 06:24 AM IST
நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் நம்பிக்கை துரோகம் செய்யும் திமுக அரசு.. அம்பலப்படுத்தும் டிடிவி.தினகரன்.!

சுருக்கம்

5 பவுன் வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற கவர்ச்சியாக அறிவித்த திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதனைச் செயல்படுத்தாமல் புதுப்புது நிபந்தனைகளைப் போட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.

நகைக்கடன் தள்ளுபடியில் உண்மை நிலை என்ன என்பது குறித்து திமுக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

நகைக்கடன்கள் தள்ளுபடி 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. தேர்தலில் வெற்று பெற்று ஆட்சிக்கு வந்த பின்னர் நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், அதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். இதையடுத்து முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்த தமிழக அரசு, 48 லட்சத்து 85 ஆயிரம் நபர்கள் கடன் வாங்கியிருந்த நிலையில் 13 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்தது. அதோடு, பொது நகைக்கடன் தள்ளுபடி பெற அனுமதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களைச் சிறப்பு தணிக்கை செய்யக் கடந்த மார்ச் 8ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையும் படிங்க;- மோடியை தில்லாக எதிர்க்கக்கூடிய தைரியம் ஸ்டாலினுக்கு மட்டும்தான் இருக்கு.. சரவெடியாய் வெடிக்கும் EVKS..!

திமுக அரசு நம்பிக்கை துரோகம்

இந்நிலையில், நகைக்கடன் தள்ளுபடியில் அரசின் நிலைப்பாடுதான் என்ன என்று டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ''நகைக்கடன் தள்ளுபடியில் உண்மை நிலை என்ன என்பது குறித்து திமுக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். 5 பவுன் வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற கவர்ச்சியாக அறிவித்த திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதனைச் செயல்படுத்தாமல் புதுப்புது நிபந்தனைகளைப் போட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.

இதனால், 5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி என்பதில் திமுக அரசு நம்பிக்கை துரோகத்தை அரங்கேற்ற திட்டமிட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

எனவே, நகைக்கடன் தள்ளுபடியில் அரசின் நிலைபாடு என்ன என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும். மேலும், தள்ளுபடி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருப்போருக்கு 'நகையை மீட்காவிட்டால் ஏலம் விடப்படும்' என நோட்டீஸ் அனுப்புவதையும் உடனடியாக நிறுத்தவேண்டும்'' என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;- TASMAC: மே 1ம் தேதி முழு மதுவிலக்கா? குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இதற்கு பதில் என்னை 20 துண்டுகளாக வெட்டியிருக்கலாம்.. அன்புமணி செயலால் மனம் உடைந்த ராமதாஸ்!
எந்த பக்கம் திரும்பினாலும் போராட்டம்.. மக்களின் துயரைத்தை பார்க்காமல் கொண்டாடுவதா..? அன்புமணி காட்டம்