
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற அக்கட்க்சியின் உயர்நிலைக்குழுக்குட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
இந்த கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், தயாநிதிமாறன், கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள் வருமாறு:
பெரும்பான்மையை இழந்துவிட்ட அதிமுக அரசு பதவி விலக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவுக்கு 111 எம்.எல்.ஏக்களின் ஆதரவுதான் உள்ளது என தேர்தல் ஆணையமே கூறியுள்ளது.
ஆர்.கே.நகரில் தேர்தல் பணியாற்ற தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் யார் எந்த பதவியில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புயல் நிவாரணமாக ரூ. 13520 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2ஜி எனும் மாயாவி காற்றில் கலந்த கற்பனை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2ஜி வழக்கை கடைசி வரை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.