பரபரப்பான சூழ்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?

Published : Sep 08, 2018, 11:07 AM ISTUpdated : Sep 09, 2018, 07:59 PM IST
பரபரப்பான சூழ்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?

சுருக்கம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் துரைமுருகன் பங்கேற்றுள்ளனர். திமுக எம்பிக்கள், எம்எல்ஏ.க்கள் கலந்து கொண்டுள்ளனர். 

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், விறுவிறுப்புடன் நடைபெறுகிறது. கடந்த 5ம் தேதி கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி நடத்திய மு.க அழகிரி, “பேரணியில் பங்கேற்ற ஒன்றரை லட்சம் பேர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா?” என மறைமுகமாக ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். 

மேலும், கட்சி நிர்வாகிகள் யாரும் அழகிரி பேரணியில் பங்கேற்றனரா? என்ற விசாரணையையும் ஸ்டாலின் நடத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், அப்படி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றது தெரியவரும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, இன்று நடக்கும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?