உளவுதுறையின் கட்டுப்பாட்டில் சோஃபியா! கைது பீதியில் கைகழுவிய ஆதரவாளர்கள்!

By sathish kFirst Published Sep 8, 2018, 10:55 AM IST
Highlights

ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரின் சர்ச் எஞ்சினில் இந்திய உளவுத்துறை போலீஸால் அதிகம் தேடப்படும் நபர் ஒருவரென்றால் அது இப்போதைக்கு தூத்துக்குடி சோஃபியாதான்

ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரின் சர்ச் எஞ்சினில் இந்திய உளவுத்துறை போலீஸால் அதிகம் தேடப்படும் நபர் ஒருவரென்றால் அது இப்போதைக்கு தூத்துக்குடி சோஃபியாதான். பொண்ணோட ஹிஸ்டரி, ஜியாகிரபியில் ஆரம்பித்து அத்தனை தகவல்களையும் டவுன்லோடுவதும், பிரிண்டெடுப்பதுமாகவே அவர்களின் பொழுது கழிகிறது. காரணம்?...பி.ஜே.பி.க்கு எதிராக சோஃபியா பொங்குவதற்கு அடர்த்தியான பின்புலங்கள் ஏதாவது இருக்கிறதா? என்பதை கண்டறிவதுதான். 

அந்த வகையில் அவர்கள் கண்டுபிடித்த பல தகவல்களில் சில இப்படியாக கசிகின்றன...கனடாவிலிருந்தபடியே தமிழகத்தில் அதிலும் குறிப்பாக தூத்துக்குடியில் நடக்கும் அதிகார துஷ்பிரயோகங்களை உற்று நோக்குவதும், அதைப்பற்றி இணையத்தில் விமர்சிப்பதும் சோஃபியாவின் நோக்கமாகவே இருந்திருக்கிறது. சுற்றுச்சூழல் பற்றி நிறையவே எழுதியிருக்கிறார். ஸ்டெர்லைட் பற்றி நிறையவே கவலைப்பட்டு எழுதியிருக்கும் சோஃபி, போபால் பேரழிவுக்கு இணையான அக்கிரமத்தை கொடுக்கக்கூடியது ஸ்டெர்லைட் என்று குறிப்பிட்டிருக்கிறார். 

அதேபோல் ஸ்டெர்லைட்டிடம் இருந்து பி.ஜே.பி. மற்றும் காங்கிரஸ் என இரண்டு கட்சிகளுமே கோடிகளில் நன்கொடை பெற்றதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். ஆக மொத்தத்தில்  இரண்டு தேசிய கட்சிகளையுமே வெச்சு செய்திருக்கிறார் சோஃபியா. இவை எல்லாவற்றையுமே கணக்கிலெடுத்து ஆராய்ந்திருக்கிறது உளவுத்துறை. பிரச்னைகளின் அடிப்படையில் இந்திய  இறையாண்மைக்கு எதிராகவோ, பிரிவினைவாத நோக்கத்துடனோ ஏதாவது எழுதியிருக்கிறாரா இவர் என்பதையும் லென்ஸ் வைத்து நோண்டி கவனிக்கிறார்கள். 

சவுண்டு விட்ட சோஃபிக்கண்ணு நோக்கி உளவுத்துறையின் கழுகுப்பார்வைகள் இப்படியிருக்க, அவரை ‘வீரத்தமிழச்சி’ என்று சம்பவ நாளன்று ஹேஸ்டேக் போட்டு டிரெண்டிங் செய்தவர்கள் இப்போது அடுத்த வேலையை பார்க்க போய்விட்டதுதான் சோகமான யதார்த்தம்!

click me!