விலைபோகும் திமுக கவுன்சிலர்கள்... தட்டித்தூக்கும் ஓபிஎஸ்.. கடுப்பில் மு.க.ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Jan 9, 2020, 3:47 PM IST
Highlights

தேனி மாவட்டம் சின்னமனுார் ஒன்றியத்தில் உள்ள 10-ல் 6 வார்டுகளில் திமுக வென்றது. தலைவர், துணைத்தலைவர் பதவிகளை அக்கட்சி சுலபமாக கைப்பற்றும் நிலையிருந்தது. ஜனவரி 6-ல் ஒன்றியத்தில் பதவியேற்ற பின் திமுக கவுன்சிலர்கள் 6 பேரும் ஒரே வாகனத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் வார்டு திமுக கவுன்சிலர் ஜெயந்தி வாகனத்தில் ஏறமறுத்தார். போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு சென்றவரை மாவட்ட திமுக நிர்வாகிகள் சந்திக்க முடியவில்லை. 
 

தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியம் 1-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயந்தி சிவக்குமார் அவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை அதிமுகவில் இணைந்தார்.

தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் 10 மாவட்ட கவுன்சிலர்கள். இதில், 8 இடங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள 2 இடங்கள் திமுக வசம் உள்ளன. இதேபோல, 8 ஒன்றியங்களில் உள்ள 98 ஒன்றியக் கவுன்சிலர்களில், 49 இடங்களை அதிமுக கூட்டணியும், 42 இடங்களை திமுக கூட்டணியும், 5 இடங்களை அமமுகவும், 2 இடங்களை சுயேச்சையும் கைப்பற்றியுள்ளன. கம்பம், ஆண்டிபட்டி, போடி, உத்தமபாளையம் ஆகிய ஒன்றியங்களில் அதிமுக பெரும்பான்மையுடனும், தேனி, சின்னமனூர், பெரியகுளம் ஆகிய ஒன்றியங்களில் திமுக பெரும்பான்மையுடனும் உள்ளனர். கடமலை-மயிலையில் சம பலத்துடன் உள்ளனர். 

இந்நிலையில், திமுக பெரும்பான்மை பலத்துடன் உள்ள தேனி, சின்னமனூர் மற்றும் பெரியகுளம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள திமுக கவுன்சிலர்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் அதிமுக தீவிரம்காட்டி வந்த நிலையில் அதில் வெற்றியும் பெற்றுள்ளது. இந்த சம்பவம் மு.க.ஸ்டாலினை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

இந்நிலையில், தேனி மாவட்டம் சின்னமனுார் ஒன்றியத்தில் உள்ள 10-ல் 6 வார்டுகளில் திமுக வென்றது. தலைவர், துணைத்தலைவர் பதவிகளை அக்கட்சி சுலபமாக கைப்பற்றும் நிலையிருந்தது. ஜனவரி 6-ல் ஒன்றியத்தில் பதவியேற்ற பின் திமுக கவுன்சிலர்கள் 6 பேரும் ஒரே வாகனத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் வார்டு திமுக கவுன்சிலர் ஜெயந்தி வாகனத்தில் ஏறமறுத்தார். போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு சென்றவரை மாவட்ட திமுக நிர்வாகிகள் சந்திக்க முடியவில்லை. 

நேற்று முன்தினம் அதிகாலையில் அவர் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றதாக கூறப்பட்டது. இந்நிலையில், சென்னையில் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தை ஜெயந்தியும் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுகவும் திமுகவும் தலா 5 கவுன்சிலர்களுடன் சமபலத்தில் இருப்பதால் உன்றிய தலைவர் பதவியை கைப்பற்றுவதில் இரு கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. 

ஏற்கனவே ஜெயமங்கலம் 8-வது வார்டு திமுக கவுன்சிலர் செல்வம், நேற்று சென்னையில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!