விசிகவை கழட்டிவிட விசித்திர கண்டிஷன்களைப் போடும் திமுக!! திகிலில் திருமா...

By sathish kFirst Published Feb 17, 2019, 11:15 AM IST
Highlights

திமுக, கூட்டணியில் இருந்து கழற்றி விடுவதற்காகவே விசிகவிற்கு, திமுக, தரப்பில், பல திடீர் நிபந்தனைகள் விதிக்கப்படுவதால் திகிலில் இருக்கிறாராம் திருமாவளவன்.

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தீவிரமாக நடந்து வருகின்றன.  அதிமுக திமுக கட்சிகளுடனான கூட்டணியில்,  சிறிய சிறிய கட்சிகள், தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. ஓட்டு வங்கி உள்ள கட்சிகளை வளைக்கும், ரகசிய வேலைகளை, பெரிய கட்சிகளும் கையில் எடுத்துள்ளன.

திமுக கூட்டணியில், காங்கிரஸ், - மதிமுக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. சமீபத்தில், திமுக, தலைவர், ஸ்டாலினை சந்தித்த,  வைகோ மற்றும் முஸ்லிம் லீக் தலைவர், காதர் மொய்தீன் ஆகியோர், தங்களுக்கான ஒதுக்கீடு குறித்து பேசினர். 

இந்த பேச்சு திருப்திகரமாக அமைந்ததாக, இரு தரப்பு வட்டாரங்களிலும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், திமுக, கூட்டணியில் இடம்பெற, திருமாவளவன் தரப்பு, முயற்சி எடுத்து வருகிறது. அந்த கட்சிக்கு, 2014 லோக்சபா தேர்தலில், இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இம்முறை, மூன்று தொகுதிகளை வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதை, திமுக, தலைமை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அக்கட்சியை கழற்றி விடுவதற்கு, திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, அக்கட்சிக்கு பல நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகவும் தெரிகிறது.

இது குறித்து, திமுக, வட்டாரத்தில்; விசிகவை சேர்க்க வேண்டாம்' என, கொங்கு மண்டல மாவட்ட செயலாளர்கள் கூறுகின்றனர். அதேபோல வட மாவட்டங்களைச் சேர்ந்த, திமுக முக்கியப்புள்ளிகள் கறாராக சொல்லிவிட்டார்களாம், அதனால், அக்கட்சியை சேர்ப்பதா வேண்டாமா என்பதில் உறுதியான முடிவை, திமுக,வால் எடுக்க முடியவில்லை. அந்த கட்சி, தானாக வெளியேற வேண்டும் என, திமுக, தலைமை நினைக்கிறது. இதற்காக, அந்த கட்சிக்கு, திடீர் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த முறை போன்று, இரண்டு தொகுதிகள் வேணும்னா, உதயசூரியன்ல தான்  மட்டுமே போட்டியிடணும். மோதிரம் சின்னத்தில் போட்டியிட விரும்பினால், ஒரு தொகுதி தான் தர முடியும்ன்னு கறாராக சொல்லப்பட்டதாம். 

அதுமட்டுமல்ல, தேர்தல் செலவிற்கும் நேரடியாக பணம் வழங்க முடியாது. 'பூத் ஏஜன்டு' களுக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் மூலமாக மட்டுமே பணம் வழங்கப்படும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இது பரவால்ல, இதைவிடக் கொடுமை என்னன்னா? நடக்கப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிரசாரம் பண்ணுங்க, சட்டசபை தேர்தலில் ஒன்னு ரெண்டு தொகுதி எக்ஸ்டராவா கொடுக்குறோம்.  அதாவது திமுகவிற்கு  ஆதரவா பிரசாரம் மட்டுமே பண்ண சொல்லி (சீட்டெல்லாம் கொடுக்க முடியாது என) திருமாவை வெறுப்பேத்தியுள்ளார்களாம். 

இந்நிலையில், திமுக, விதித்துள்ள  நிபந்தனைகளால், விசிக, தானாக வெளியேறி விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பாமக, வருகையை எதிர்பார்த்து தான், விசிக கழற்றி விடப்படுகிறது என்ற எண்ணம், ஆதிதிராவிட சமுதாய மக்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, பாமக,வையும் சேர்க்க வேண்டாம் என்ற முடிவில், ஸ்டாலின் உறுதியாக உள்ளார் என இவ்வாறு  திமுக முக்கிய புள்ளிகள் கூறுகின்றனர்.

click me!