கல்யாணத்தில் வாயில் வடை சுட்ட ஸ்டாலின்...!! சிரித்துக்கொண்டே அழுத உடன் பிறப்புகள்...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 12, 2020, 12:59 PM IST
Highlights

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சூழல் விரைவில் வரும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .  திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார் ,  

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சூழல் விரைவில் வரும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார் ,  செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் எடப்பாடி பழனிச்சாமியின் முதலமைச்சராக பொறுப்பேற்றார் .  அதைத்தொடர்ந்து அதிமுகவில் உட்கட்சி அரசியல் ,இழுபறி நிலவி வந்த நிலையில் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் ஆட்சியை தக்க வைத்தார் எடப்பாடி  பழனிச்சாமி , அவர் பொறுப்பேற்றது முதல் அதிமுக ஆட்சி இதோ களையப் போகிறது அதோ களையாப்போகிறது என ஸ்டாலின் கூறி வந்த நிலையில் , ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சூழல் உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில் சென்னை மதுரவாயலில் கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட ஆவர்,   பேசியதாவது ,  டெல்டா மாவட்டங்களை  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய அரசுதான் அறிவிக்க முடியும்,   ஆனால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என தமிழக அரசு அறிவிக்கிறது எப்படி என்றார்.   ஏற்கனவே காவிரி டெல்டா மாவட்டங்களில் அமைக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டம் என்ன ஆனது.  தமிழகத்தில் இருக்கும் ஹைட்ரோகார்பன் கிணறுகளை மூட மத்திய அரசு அனுமதி தந்து விட்டதா.?  காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்தது  யாரை ஏமாற்ற.?  காவிரி டெல்டா மாவட்டங்களின் வேளாண் மண்டலமாக அறிவிப்பது பற்றி மக்களவையில் டி ஆர் பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு இதுவரை ஏன் பதில் அளிக்கவில்லை.? 

இதையும் படியுங்கள் :- ஏடாகூட பிளான் , வதைபடும் மாணவர்கள்...!! செங்கோட்டையனுக்கு புத்தி சொல்லும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்...!!

என கேள்வி எழுப்பினார்,  இந்நிலையில் காவிரி பாயும் மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிப்பது குறித்து ரகசிய கடிதத்தை டெல்லிக்கு சென்று கொடுத்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார் ,  சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பு தொடர்பாக தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நிச்சயம் கேள்வி எழுப்புவோம் என ஸ்டாலின் கூறினார் .  தொடர்ந்து பேசிய அவர் உள்ளாட்சி எம்பி தேர்தல் தோல்வி காரணமாக வேளாண் மண்டல அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுகிறார்.  விரைவில் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சூழல் வரும் என கூறினார்.  

 

click me!