'வெறுப்பு அரசியலுக்கு டெல்லி கொடுத்த தண்டனை'..! பாஜகவை தாறுமாறாக விமர்சித்த ஜவாஹிருல்லா..!

By Manikandan S R SFirst Published Feb 12, 2020, 12:30 PM IST
Highlights

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் அவர்களது அமைச்சரவை சகாக்கள் 70 பேர், 13 முதல்-அமைச்சர்கள் மற்றும் 200 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து பா.ஜ.க.விற்கு வாக்கு சேகரிக்க நடத்திய வெறுப்பு பரப்புரைக்குத் தலைநகர் டெல்லி மக்கள் தம் வாக்குகள் மூலம் தகுந்த தண்டனை கொடுத்துள்ளனர்.
 

டெல்லி சட்டப்பேரவையில் மொத்தம் இருக்கும் 70 தொகுதிகளுக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணி அளவில் தொடங்கியது. ஆரம்பம் முதலே ஆளும் கட்சியான ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்தது. மொத்தம் இருக்கும் 70 தொகுதிகளில் அக்கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது. ஆட்சியமைக்க 36 இடங்கள் தேவை என்கிற நிலையில் அக்கட்சி அதையும் கடந்து மிகப்பெரிய பெரும்பான்மையை பெற்றிருக்கிறது.

மத்தியில் ஆளும் பாஜக 8 தொகுதிகளை வென்றுள்ளது. இதற்கு முன்பாக டெல்லியை ஆண்ட காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது. மூன்றாவது முறையாக முதல்வராகும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி தலைவருமான ஜவாஹிருல்லா, டெல்லியில் ஆம் ஆத்மிக்கு கிடைத்த வெற்றி, பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கான தோல்வி என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அவரது ஆம் ஆத்மி கட்சியினருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

'உங்க நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது'..! டெல்லி மக்களுக்கு தலைவணங்கிய கெஜ்ரிவால்..!

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் அவர்களது அமைச்சரவை சகாக்கள் 70 பேர், 13 முதல்-அமைச்சர்கள் மற்றும் 200 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து பா.ஜ.க.விற்கு வாக்கு சேகரிக்க நடத்திய வெறுப்பு பரப்புரைக்குத் தலைநகர் டெல்லி மக்கள் தம் வாக்குகள் மூலம் தகுந்த தண்டனை கொடுத்துள்ளனர். என்.பி.ஆர்., என்.ஆர்.சி. மற்றும் சி.ஏ.ஏ. திட்டங்களைக் கொண்டு வந்து மக்களின் குடியுரிமையைச் சந்தேகத்திற்குரிய ஒன்றாக மாற்றி உள்ள பா.ஜ.க.விற்குத் தகுந்த பாடத்தை டெல்லி மக்கள் புகட்டியுள்ளார்கள். பா.ஜ.க.வின் வெறுப்பு பரப்புரையை வீழ்த்துவதற்குச் சிறந்த வியூகத்தை வகுத்து மூன்றாம் முறையாக மீண்டும் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

click me!