டார் டாராக கிழிக்கப்பட்ட அழகிரி போஸ்டர்கள்!! அறிவாலயம் எதிரே ஒட்டப்பட்டதால் பெரும் கடுப்பு...

By sathish kFirst Published Sep 4, 2018, 5:28 PM IST
Highlights

திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயம் எதிரிலேயே உள்ள சுவர்களிலும், போக்குவரத்து தடுப்புகளிலும் போஸ்டர்கள் ஓட்டப் பட்டுள்ளனனர். இதனால் கடுப்பான அறிவாலய விசுவாசிகள் போஸ்டரை கிழித்துள்ளனர். 

திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயம் எதிரிலேயே உள்ள சுவர்களிலும், போக்குவரத்து தடுப்புகளிலும் போஸ்டர்கள் ஓட்டப் பட்டுள்ளனனர். இதனால் கடுப்பான அறிவாலய விசுவாசிகள் போஸ்டரை கிழித்துள்ளனர். 

திமுகவில் கலைஞர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு மு.க.ஸ்டாலின் தான் எல்லாம் என்று ஆகி விட்டது. கலைஞர் மறைவிற்கு முன்னரும் அப்படி தான் இருந்தது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக பிளவு பட்டது போல , திமுகவில் எதுவும் ஏற்பட்டுவிட கூடாது என்பதனாலேயே, கலைஞர் இருக்கும் போதே கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் அழகிரி. 

அதுவும் கலைஞராலேயெ நீக்கப்பட்டார் என்பது தான் முக்கியமானது. தற்போது கூட கலைஞரால் நீக்கப்பட்டவர் அழகிரி என்பதை காரணம் காட்டி தான் மீண்டும் அவரை திமுகவில் சேர்க்க மறுக்கின்றனர்.
 குடும்ப அரசியலில் ஸ்டாலினுக்கு போட்டியாக யாரும் வளர்ந்து விட கூடாது என்பதனாலேயே முளையிலேயே கிள்ளி எறியப்பட்ட அழகிரி, தற்போது மீண்டும் திமுகவில் இணைய எவ்வளவு முயன்று பார்க்கிறார். ஆனாலும் அவருக்காக சற்றும் அசைய மறுத்திருக்கின்றனர் சம்பந்தப்பட்டோர்.  

நாளைய தினம் கலைஞருக்காக அழகிரி நடத்த போகும் இந்த பேரணி இவ்வளவு முக்கியத்துவம் பெற காரணம்,  இந்த பேரணியை திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடத்தி காட்ட வேண்டும் என்பதில் முழு முனைப்புடன் இறங்கி இருக்கிறார். 

இந்நிலையில் கருணாநிதியின் சாமாதியில் மௌன அஞ்சலி செலுத்துவதற்காக ஒரு லட்சம் பேரை கூட்டி மெரினாவை மிரட்ட ப்ளான் போட்டுள்ளார் அழகிரி. இதனால் தமிழகம் முழுவதிலுமிருந்து ஆதரவாளர்களை களம் இறக்க இருக்கிறார். நாளை நடக்கவிருக்கும் இந்த பிரமாண்ட பேரணியை முன்னிட்டு தலைநகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயம் எதிரிலேயே உள்ள சுவர்களிலும், போக்குவரத்து தடுப்புகளிலும் போஸ்டர்கள் ஓட்டப் பட்டுள்ளனனர்.

இதனால் கடுப்பான அறிவாலய விசுவாசிகள் போஸ்டரை கிழித்து தள்ளியுள்ளனர். நாளை பிரமாண்ட பொதுகூட்ட பிசியில் இருக்கும் அழகிரி ஆக்ஷனில் இறங்குவாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

click me!