தமிழிசையையும் கைது செய்ய வேண்டும்! மறைமுகமாக சாடிய கமல்!

By manimegalai aFirst Published Sep 4, 2018, 4:45 PM IST
Highlights

தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக விமானத்தில் கோஷமிட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த் பெண் சோபியா கைது செய்யப்பட்டது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட இவருக்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது உள்ளது குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 
 

தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக விமானத்தில் கோஷமிட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த் பெண் சோபியா கைது செய்யப்பட்டது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட இவருக்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது உள்ளது குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில், பா.ஜ.க. தலைவர் தமிழிசையை பார்த்ததும், அதே விமானத்தில் பயணித்த மருத்துவ மாணவி சோபியா, திடீரென பா.ஜ.க. ஒழிக என்று ஆவேசமாக முழக்கமிட்டார். இதனால் ஆவேசமடைந்த தமிழிசை, விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். விசாரணையில், மாணவி சோபியா கனடாவில் படித்து வருவதும், அவர், தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவரின் மகள் என்பதும் தெரிய வந்தது. 

புகாரின் பேரில் சோபியாவை கைது செய்த போலீசார், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம், நிபந்தனையின்றி சோபியாவுக்கு ஜாமீன் வழங்கி, மகளுக்கு அறிவுரை கூறுமாறு பெற்றோருக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளனர்.

 

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கமல், "பொது இடங்களில் குரல் எழுப்புவதும், விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப்   படவேண்டிய குற்றவாளிகளே". சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில்  எடுக்கிறோம். அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்? நானும் அரசியல்வாதிதான்  என்பதை உணர்ந்தே சொல்கிறேன்". என்று கூறியுள்ளார். இது மறைமுகமாக கமல் தமிழிசையும் குற்றவாளி தான் அவரும் கைது செய்யப்பட வேண்டுயவர் என்பது போல் கமல் சாடியுள்ளது போல் உள்ளதாக பலர் தங்களுடைய விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள். 

 

பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம்.அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்?
நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்.

— Kamal Haasan (@ikamalhaasan)

click me!