புழலில் உள்ள அபிராமிக்கு "இந்த தண்டனை தான்" வழங்க வேண்டும்..! போர்க்கொடி தூக்கிய விசிக மகளிர் அணி...!

Published : Sep 04, 2018, 04:46 PM ISTUpdated : Sep 09, 2018, 08:27 PM IST
புழலில் உள்ள அபிராமிக்கு "இந்த தண்டனை தான்" வழங்க வேண்டும்..! போர்க்கொடி தூக்கிய விசிக மகளிர் அணி...!

சுருக்கம்

அபிராமிக்கு தூக்கு தண்டனை வழங்கி கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிர் அமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டு உள்ளது. 

அபிராமிக்கு தூக்கு தண்டனை வழங்கி கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிர் அமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டு உள்ளது. 

சென்னை குன்றத்தூரில் இரண்டு குழந்தைகளுக்கு பாலில் விஷ மருந்து கொடுத்து கொன்ற அபிராமி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், வேலூர் அண்ணா சாலையில் வேலூர் மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.  

அப்போது , கள்ளக்காதலுக்காக குழந்தையை கொன்றுவிட்டு ஓடிபோன அபிராமிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் மற்றும் தூத்துக்குடி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஷேபியா மீது காவல்துறையினர்  நடவடிக்கை எடுத்ததை கண்டித்தும், பாஜக மாநில தலைவர் தமிழிசை அவர்களின் அடக்கு முறையை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் 20க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணபபட்டது. 

PREV
click me!

Recommended Stories

இஸ்லாமிய நாடுகளில் மோடி, யூத நாடுகளில் ஜெய்சங்கர்..! உலக அளவில் இந்தியாவின் ராஜதந்திர வியூகம்..!
குனிந்து கும்பிடும் போடும் உங்களுக்கு ‘அதிமுக’ என்ற பெயர் எதற்கு? வாய் திறக்காத இபிஎஸ்க்கு எதிராக முதல்வர் காட்டம்