அதிமுக- தேமுதிக நிர்வாகிகளை வளைத்துப்போட்ட திமுக வேட்பாளர்... அலறும் பாமக..!

Published : Apr 02, 2019, 03:59 PM IST
அதிமுக- தேமுதிக நிர்வாகிகளை வளைத்துப்போட்ட திமுக வேட்பாளர்... அலறும் பாமக..!

சுருக்கம்

அரக்கோணம் தொகுதியில் அதிமுக - தேமுதிக-வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை, வளைத்துப்போட திமுக வேட்பாளர் ஜெகத் ரட்சகன் முயற்சித்து வருவதால் தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது.   

அரக்கோணம் தொகுதியில் அதிமுக - தேமுதிக-வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை, வளைத்துப்போட திமுக வேட்பாளர் ஜெகத் ரட்சகன் முயற்சித்து வருவதால் தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. 

அரக்கோணம் மக்களவை தொகுதியில் போட்டியிட அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜேந்திரன், அமமுக வேட்பாளர் பார்த்திபன் ஆகியோர் களமிறங்கினாலும், இந்தத் தொகுதியில் வலுவான போட்டி ஜெகத் ரட்சகனுக்கும், ஏ.கே.மூர்த்திக்கும் நிலவுகிறது. 

ஜெகத் ரட்சகன் பணத்தை வாரி இரைப்பார் என முன்பே கணித்த எதிர்கட்சி வேட்பாளர்கள் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரின் மனைவி பெயரில், சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம், இலங்கையில் ரூ.27 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்துள்ளது. இந்த சொத்துகளை ஜெகத்ரட்சகன் வேட்புமனுவில் மறைத்துள்ளார். இது, மிகப்பெரிய குற்றம். எனவே, ஜெகத்ரட்சகனின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்’’ என்றெல்லாம் புகார் தெரிவித்து பரபரப்பை கிளப்பியது. 

இலங்கை நிறுவனத்தில் ஜெகத்ரட்சகன் முதலீடு செய்யவில்லை. அதிலிருந்து, விலகிக்கொண்டதாகக் கூறி சமாளித்து விட்டார். ஆனாலும் விலகிக் கொண்டதற்கான சான்றிதழை இப்போது வரை கேட்டு அடம்பிடித்து வருகிறது பாமக தரப்பு. அவர்கள் சான்றிதழை கேட்டு தொங்கிக் கொண்டே இருக்க, சத்தமில்லாமல் மற்றொரு காரியத்தில் இறங்கி குட்டையை குளப்ப ஆரம்பித்து இருக்கிறார் ஜெகத்ரட்சகன். 

பணத்தை தண்ணியாக இறைத்து வந்த ஜெகத் ரட்சகன், அடுத்த கட்டமாக, தொகுதியில் உள்ள அதிமுக, - தேமுதிக முக்கிய நிர்வாகிகளை, வளைத்துப்போடும் முயற்சியில், அவரது ஆதரவாளர்கள் இறங்கி இருக்கிறார்கள். அதாவது, அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கு வேலை செய்யாமல் அடக்கி வாசிக்கும்படியும், அதற்கு தகுந்த பண பலனை உடனடியாக நிறைவேற்றித் தருவதாகவும் தூண்டிலை வீசியுள்ளனர். சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகள் சிலருக்கு, இரண்டு முதல் 10 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசி படிந்து விட்டதாக கூறுகிறார்கள் அரக்கோணம் தொகுதிவாசிகள். 
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!