இளங்கோவனோடு இணைந்து மிரட்டும் டி.டி.வி அணி... நடுக்கத்தில் ஓ.பி.எஸ்..!

By Thiraviaraj RMFirst Published Apr 2, 2019, 3:08 PM IST
Highlights

காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் வம்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என துணை முதல்வர் ஓ.பி.எஸ் தனது மகனுக்கு அறிவுறுத்தி இருப்பதாக அதிரடி தகவல் வலம் வருகிறது. 

காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் வம்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என துணை முதல்வர் ஓ.பி.எஸ் தனது மகனுக்கு அறிவுறுத்தி இருப்பதாக அதிரடி தகவல் வலம் வருகிறது. 

குடும்ப அரசியல் கூடாது என்கிற கருத்தோடு மெரினாவில் ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் இப்போது அவரது மகனையே தேனி தொகுதியின் வேட்பாளாராக்கி இருக்கிறார். ரவீந்திரநாத் குமார் வெற்றிபெற்றால் கட்டாயம் மத்திய அமைச்சர் என்று பிரச்சாரம் செய்கிறது ஓபிஎஸ் தரப்பு. தேனி தொகுதியில் தனது மகனை வெற்றிபெற கடும் பிரயத்தணப்பட்டு வருகிறார் ஓ.பி.எஸ். ஆனால், ஓ.பி.எஸ் மகனை எப்படியும் வீழ்த்தியே ஆக வேண்டும் என டி.டி.வி.தினகரன் அணி ஒருபுறமும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறுபுறமும் மல்லுக்கட்டி வருகின்றனர். 

பிரச்சாரத்தில் ஓ.பி.எஸின் தூக்கத்தைக் கெடுக்கும் விதத்தில் வேகம் காட்டும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “தேனியின் முக்கியப் பிரச்சினையே, ஓபிஎஸ்ஸும் அவரது மகனும்தான். திண்டுக்கல்- குமுளி அகலரயில் பாதைத் திட்டம் பல ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டங்களை நடத்தியும் இதுவரை இத்திட்டம் ஆய்வு நிலையிலேயே இருக்கிறது. இந்தத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் தேனி மாவட்டத்தின் ஓரப் பகுதியில் இருந்தும் நேரடியாக பெங்களூரு, சென்னை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு நேரடியாக ரயிலில் பயணிக்கலாம்.

அகல ரயில் பாதை அமைப்பதற்காகப் பிரித்துப் போடப்பட்ட மதுரை - போடி ரயில்வே பாதை வேலை முடியாமல் இருக்கக் காரணம், ஒப்பந்ததாரரிடம் ஓபிஎஸ் 30 சதவிகித கமிஷன் கேட்பதுதான். நான் வெற்றிபெற்றால் ஆறே மாதத்தில் ரயில் பாதை வரும்” எனப் பிரச்சாரத்தை எடுத்து விட, இதைக் கேட்டு கொதித்துப்போன ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத், “நம்மளோட ஐடி விங்கை வைச்சு, இளங்கோவனை பிரித்து மேய்ந்து விடலாமா? என தந்தையிடம் கேட்டிருக்கிறார் ரவீந்திரநாத் குமார்.

அதற்கு, “வேண்டாம் என அவசரமாக தலையைக் குலுக்கிய ஓ.பி.எஸ், ‘’அவரை மற்றவங்க மாதிரின் டீல் பண்ண வேண்டாம். எக்குத்தப்பா யோசிச்சு பேசி, வர்ற ஓட்டையும் நமக்கு விழவிடாம செய்து விடுவார்’’ என மகனை அடக்கி வைத்து விட்டாராம் ஓ.பிஎஸ். 

click me!