திமுக போட்டியிடும் 20 தொகுதிகளையும் அடிச்சி தூக்க தயாராக உள்ள வேட்பாளர்கள் இவர்கள் தானாம்..!

By ezhil mozhiFirst Published Mar 15, 2019, 7:58 PM IST
Highlights

வரும் நாடாளுமன்ற தேர்தலில், எந்தெந்த தொகுதியில் யாரெல்லாம் போட்டி இட உள்ளனர் என்ற லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது. 

வரும் நாடாளுமன்ற தேர்தலில், எந்தெந்த தொகுதியில் யாரெல்லாம்போட்டி இட உள்ளனர் என்ற லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது. இது இன்னும் இறுதி செய்யப்பட வில்லை என்றாலும், இந்த லிஸ்டில் இடம் பெற்றவர்கள் தான் திமுக சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக தலைமையில் கூட்டணி அமைந்து விட்டது. மற்றபடி அமமுக, மக்கள் நீதி மய்யம்  உள்ளிட்ட கட்சிகள்  தனித்து போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளது. கூட்டணிக் கட்சிகள் 20 தொகுதிகளிலும் திமுக 20 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அந்த வகையில் திமுக போட்டியிட உள்ள 20  தொகுதிகளில் யாரெல்லாம் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம்.

தொகுதி மற்றும் வேட்பாளர்கள் 

1. நீலகிரி- ஆ.ராசா

2. பொள்ளாச்சி – கோகுல் (பொங்கலூர் பழனிச்சாமி மருமகன்)

3. திண்டுக்கல் – வேலுச்சாமி

4. கடலூர் - கதிரவன் (எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மகன்)

5. மயிலாடுதுறை – ராமலிங்கம் (முன்னாள் எம்எல்ஏ) அல்லது ஜெகவீரபாண்டியன்

6. தஞ்சாவூர் - பழனிமாணிக்கம்

7. சேலம் - டாக்டர் பிரபு  

8. தூத்துக்குடி – கனிமொழி

9. தென்காசி (SC) – தனுஷ்குமார் அல்லது பொன்ராஜ்

10. திருநெல்வேலி – கிரகாம்பெல் அல்லது ஆரோக்கிய ஞானவேல்

11. வடசென்னை – டாக்டர் கலாநிதி (ஆற்காடு வீராசாமியின் மகன்)

12. மத்திய சென்னை-  தயாநிதி மாறன்

13. தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்

14. ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு

15. காஞ்சிபுரம் (SC) – அண்ணாதுரை அல்லது செல்வம்

16. அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்

17. வேலூர் - கதிர் ஆனந்த் (துரைமுருகன் மகன்)

18. தருமபுரி – மணி அல்லது செந்தில் குமார்

19. திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை

20. கள்ளக்குறிச்சி – கவுதம சிகாமணி (பொன்முடியின் மகன்)

இந்த பட்டியலில் ஒரு சில மாற்றம் வரலாம். இது இறுதி பட்டியல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது

click me!