தலைகீழாக மாறிய தேர்தல் முடிவுகள் ! வேலூர் தொகுதியில் திமுக முன்னிலை !!

By Selvanayagam PFirst Published Aug 9, 2019, 9:04 AM IST
Highlights

வேலூர்  மக்களவைத் தொகுதியில் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றிருந்த நிலையில் தற்போது திமுக வேட்பாளர் கத்ர் ஆன்ந்த் தற்போது 541 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் பதிவான 3039 தபால் வாக்குளில் அதிமுக வேட்பாளர் சண்முகம்  1777 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ள நிலையில் முதல் சுற்றில் அவரை அதிகா வாக்குகள் பெற்று  முன்னணிலை பெற்றுள்ளார்.

வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக . சார்பில் கதிர்ஆனந்த் மற்றும் , நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி என மொத்தம்  28 பேர் போட்டியிட்டனர்.

தேர்தலன்று பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் தற்போது   எண்ணப்பட்டு வருகிறது. சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதனையொட்டி அங்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்வைக்கப்பட்டிருந்தன..

இந்த தேர்தலில் 3039  தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. முதலில் இந்த வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 6 இடங்களில் 14 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 

தபால் வாக்குகள் எண்ணப்படும் அதே நேரத்தில் தேர்தலில் பதிவான வாக்குளும் எண்ணப்பட்டு வருகின்றன.

இதன் முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம்  அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அவர் 1777 வாக்குளைப் பெற்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து 6 சட்மன்ற தொதகுதிகளில் 5 தொகுதிகிளில் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் ஏ.சி.சண்முகம் 21 449 வாக்குளும், கதிர் ஆனந்த 20 623 வாக்குகளும் பெற்றுள்ளார். இதில் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றிருந்தார்.

இந்நிலையில் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 34052 வாக்குகளும், ஏ.சி.சண்முகம் 32 511 வாக்குளும் பெற்றுள்ளார்.

இதில் திமுக வேட்பாளர் 1541 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

click me!